Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அநுராதபுரம் வலய கல்விப் பணிமனைக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம்
[04 - April - 2008] [Font Size - A - A - A]
* கடமை தவறியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

அநுராதபுரம் நிருபர்

அநுராதபுரம் வலயக்கல்விப் பணிமனைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்ட வடமத்திய மாகாண முதலமைச்சரும் மாகாண கல்வியமைச்சருமான பேர்டி பிரேமலால் திசாநாயக்க அங்குள்ள நிர்வாகச் சீர்கேடுகள் பலவற்றையும் நேரடியாகவே பார்த்து அறிந்து கொண்டுள்ளார்.

அநுராதபுரம் வலயக்கல்விப் பணிமனையின் நிர்வாகச் சீர்கேடுகள் பற்றி ஆசிரியர்கள் பலர் முதலமைச்சரிடம் முறையிட்டதை அடுத்தே முதலமைச்சர் திடீரென கடந்த வெள்ளியன்று வலயக்கல்விப் பணிமனைக்குச் சென்றுள்ளார்.

முதலமைச்சர் சென்ற வேளையில் வலயக்கல்விப் பணிமனையில் சேவையில் இருக்க வேண்டிய பாடங்களுக்குப் பொறுப்பான பதினைந்து உதவிக்கல்விப் பணிப்பாளர்கள் காரியாலயத்தில் இருக்கவில்லை. வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட்டுள்ள இரு காரியாலய ஊழியர்களும் வெளியில் தமது சொந்தத் தேவையின் நிமித்தம் சென்றிருந்தனர். பாடசாலை மேற்பார்வையாளர்கள் தொடர்பான அறிக்கைகள் கடந்த மூன்று மாதகாலமாக எந்த ஒரு அதிகாரியாலும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான பல குறைபாடுகள் முதலமைச்சரால் கண்டு பிடிக்கப்பட்டன.

வலயத்திலுள்ள 136 பாடசாலைகளில் மொத்தமாக 3505 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்களை வழிநடத்தவென 154 கல்வி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடசாலை அளவை விட அதிகமாகவும் 200 ஆசிரியர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்திலும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளால் கல்வித்துறை வளர்ச்சிக்கு பங்காற்ற முடியாதுள்ளது. இக்காரியாலயத்தில் நிலவும் நிர்வாகச் சீர்கேடே இதற்கெல்லாம் காரணம் என இவ்விஜயத்தினை முடித்துக் கொண்ட முதலமைச்சர் தெரிவித்தார்.

காரியாலயச் செயற்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு மாகாணக்கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவிட்ட முதலமைச்சர் தவறு செய்தவர்கள் யாராயினும் எந்தவித தராதரமும் பாராமல் தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
மடுப் பிரதேசத்தில் கடும் மோதல் திருச்சொரூபத்துடன் குருமார் வெளியேற்றம்
ஹக்கீமின் பாதுகாப்பை வாபஸ் பெற நீதிமன்றின் அனுமதி கோரி மனு
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கும் அவசியம் இல்லை
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சார்பில் மட்டு., அம்பாறை மாவட்டங்களில் வேட்பு மனு
17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை இல்லை
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தை சுற்றியவாறு இராணுவத்தினர் நிற்பதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது
இலங்கைக்கு இந்தியா 1 இலட்சம் தொன் அரிசி
வவுனியா வாரிக்குட்டியூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைவைக்கப்பட்ட கைதிகளே தப்பியோடும்போது சுட்டுக்கொலை
கிழக்கு நிர்வாகத்தை கைப்பற்ற ஆளும்கட்சி முழுமுயற்சி பிரசாரக்களத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள், முதலமைச்சர்கள்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சோதனைச்சாவடி ஊழியர் பலி
மகாவலி `எச்' வலயத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் முற்றாக நாசம், விவசாயிகள் பாதிப்பு
வீடமைப்பு திட்டத்திற்காக நாலந்தவில் 100 ஏக்கர் காணி ஒதுக்கீடு
இறைமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம்
மரண வீட்டுக்கு சென்ற உறவினர்கள் மீது தாக்குதல்; 2 பேர் காயம்; மூவர் கைது
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் போகொல்லாகம விசேட சந்திப்பு
மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை 3 ஆண்டுகளில் நிரப்ப அங்கீகாரம்
காணியை துப்புரவு செய்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர்கள் அச்சுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை
வீதி விபத்தில் வயோதிபர் பலி
ஊடகவியலாளர் குழு வேட்பு மனுத் தாக்கல்
சர்வதேச சுயாதீன நிபுணர் குழு மீது அமைச்சர் போகொல்லாகம குற்றச்சாட்டு
வலிகாமம் மேற்கில் மினிசூறாவளி மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணம்
யாழ்.குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கு விஷேட நடவடிக்கை
ஊழல் மோசடி நிர்வாக சீர்கேடுகளை நிறுத்தவே கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றோம்
இரத்தினபுரியில் இடம் பெறும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை
பணவீக்க அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி கூறும் காரணங்கள்
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்
பேச்சு வார்த்தையூடாக தீர்வு எட்ட காத்திரமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்
பஸ் அடிக்கடி பழுதடைவதால் நெடுந்தீவு மக்கள் கடும் சிரமம்
`போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தேவையான பஸ்கள் இல்லாததால் டிப்போவுக்கு நஷ்டம்'
தெற்காசியாவில் இலங்கையின் கல்வித்தரம் வீழ்ச்சி சர்வதேச பாடசாலைகள் முஸ்லிம்களுக்கு சாபக்கேடு
தோட்டப்புற சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு இருநாள் செயலமர்வை நடத்த ம.ம.மு. ஏற்பாடு
சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் மலையக சமூகம் உருவாக்கப்பட வேண்டும்
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் தமது கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயற்பட வேண்டும்
இடம்பெயர்ந்தோர், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு புத்தாண்டிற்கு முன் உலருணவு நிவாரணத்தை வழங்கவும்
3 சந்தைகளுக்கான புதிய கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிக்க 3 கோடியே 92 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் வலய கல்விப் பணிமனைக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம்
யுத்தத்தை காட்டி மக்களின் பணப்பையினுள் அரசு கைவைக்க இடமளிக்க மாட்டோம்
தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றியாவது மண்சரிவால் பாதிப்புற்றோருக்கு இடம் வழங்க வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com