Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தோட்டப்புற சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு இருநாள் செயலமர்வை நடத்த ம.ம.மு. ஏற்பாடு
[04 - April - 2008] [Font Size - A - A - A]
அமைச்சர் பெ.சந்திரசேகரனின் பணிப்புரைக்கிணங்க, சமுதாய அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சு தோட்டத்துறைசார்ந்த சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு தலைமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான இருநாள் வதிவிடப் பயிற்சி நெறியினை நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சின் பணிப்பாளர் எஸ்.விஜேசந்திரன் மேற்கொண்டு வருகிறார்.

மேற்படி திட்டத்திற்கமைய ஒவ்வொரு பயிற்சி நெறியிலும் 60 பங்குபற்றுனர்கள் என்ற அடிப்படையில் 10 செயலமர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் 600 தோட்டத்துறை சார்ந்த சமூகத் தலைவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் இரண்டு கட்ட அடிப்படையில் 2008 ஆம் ஆண்டில் 5 செயலமர்வுகளும் 2009 ஆம் ஆண்டில் 5 செயலமர்வுகளும் நடத்தப்படவுள்ளன.

இவ்வருடத்தில் நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு செயலமர்வுகளும் மற்றும் பதுளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு செயலமர்வும் நடத்த திட்டமிட்டுள்ளது.

சமுதாய அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சானது பேராதனை பல்கலைக்கழக மனிதவுரிமை நிலையத்துடன் ஒன்றிணைந்து மேற்படி செயலமர்வை நடத்த உள்ளது. மேலும், பயிற்சியின் முடிவில் மேற்படி கற்கை நிலையமானது பங்குபற்றுனர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்க உள்ளது.

இச்செயலமர்வின்போது "மனித உரிமையும் அடிப்படை உரிமையும்", "தொழிலாளர் உரிமையும் சர்வதேச தொழில் நிறுவன செயற்பாடும்", "சமுதாய அபிவிருத்தியில் சிவில் சமூகத்தினரது பங்களிப்பும் சமூகத்தலைவர்களின் பொறுப்பும்" போன்ற விடயங்களில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இப்பயிற்சி செயலமர்விற்கு சமூகத் தலைவர்கள் என்ற அடிப்படையில் தொழிற்சங்கத் தலைவர்கள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சமூக நடவடிக்கையாளர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். எனவே, மேற்குறிப்பிட்ட தகுதியினை உடையவர்களிடமிருந்து இப்பயிற்சி நெறியில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பங்கள் இம்மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னதாக எஸ்.விஜேசந்திரன், பணிப்பாளர் ஆய்வு அபிவிருத்தி பிரிவு, சமுதாய அபிவிருத்தி சமூக அநீதி ஒழிப்பு அமைச்சு, இல.35ஏ கலாநிதி என்.எம்.பெரேரா மாவத்தை, கொழும்பு-08 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Email this page Your Opinion Print this page
மடுப் பிரதேசத்தில் கடும் மோதல் திருச்சொரூபத்துடன் குருமார் வெளியேற்றம்
ஹக்கீமின் பாதுகாப்பை வாபஸ் பெற நீதிமன்றின் அனுமதி கோரி மனு
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கும் அவசியம் இல்லை
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சார்பில் மட்டு., அம்பாறை மாவட்டங்களில் வேட்பு மனு
17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை இல்லை
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தை சுற்றியவாறு இராணுவத்தினர் நிற்பதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது
இலங்கைக்கு இந்தியா 1 இலட்சம் தொன் அரிசி
வவுனியா வாரிக்குட்டியூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைவைக்கப்பட்ட கைதிகளே தப்பியோடும்போது சுட்டுக்கொலை
கிழக்கு நிர்வாகத்தை கைப்பற்ற ஆளும்கட்சி முழுமுயற்சி பிரசாரக்களத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள், முதலமைச்சர்கள்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சோதனைச்சாவடி ஊழியர் பலி
மகாவலி `எச்' வலயத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் முற்றாக நாசம், விவசாயிகள் பாதிப்பு
வீடமைப்பு திட்டத்திற்காக நாலந்தவில் 100 ஏக்கர் காணி ஒதுக்கீடு
இறைமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம்
மரண வீட்டுக்கு சென்ற உறவினர்கள் மீது தாக்குதல்; 2 பேர் காயம்; மூவர் கைது
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் போகொல்லாகம விசேட சந்திப்பு
மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை 3 ஆண்டுகளில் நிரப்ப அங்கீகாரம்
காணியை துப்புரவு செய்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர்கள் அச்சுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை
வீதி விபத்தில் வயோதிபர் பலி
ஊடகவியலாளர் குழு வேட்பு மனுத் தாக்கல்
சர்வதேச சுயாதீன நிபுணர் குழு மீது அமைச்சர் போகொல்லாகம குற்றச்சாட்டு
வலிகாமம் மேற்கில் மினிசூறாவளி மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணம்
யாழ்.குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கு விஷேட நடவடிக்கை
ஊழல் மோசடி நிர்வாக சீர்கேடுகளை நிறுத்தவே கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றோம்
இரத்தினபுரியில் இடம் பெறும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை
பணவீக்க அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி கூறும் காரணங்கள்
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்
பேச்சு வார்த்தையூடாக தீர்வு எட்ட காத்திரமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்
பஸ் அடிக்கடி பழுதடைவதால் நெடுந்தீவு மக்கள் கடும் சிரமம்
`போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தேவையான பஸ்கள் இல்லாததால் டிப்போவுக்கு நஷ்டம்'
தெற்காசியாவில் இலங்கையின் கல்வித்தரம் வீழ்ச்சி சர்வதேச பாடசாலைகள் முஸ்லிம்களுக்கு சாபக்கேடு
தோட்டப்புற சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு இருநாள் செயலமர்வை நடத்த ம.ம.மு. ஏற்பாடு
சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் மலையக சமூகம் உருவாக்கப்பட வேண்டும்
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் தமது கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயற்பட வேண்டும்
இடம்பெயர்ந்தோர், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு புத்தாண்டிற்கு முன் உலருணவு நிவாரணத்தை வழங்கவும்
3 சந்தைகளுக்கான புதிய கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிக்க 3 கோடியே 92 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் வலய கல்விப் பணிமனைக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம்
யுத்தத்தை காட்டி மக்களின் பணப்பையினுள் அரசு கைவைக்க இடமளிக்க மாட்டோம்
தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றியாவது மண்சரிவால் பாதிப்புற்றோருக்கு இடம் வழங்க வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com