Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தெற்காசியாவில் இலங்கையின் கல்வித்தரம் வீழ்ச்சி சர்வதேச பாடசாலைகள் முஸ்லிம்களுக்கு சாபக்கேடு
[04 - April - 2008] [Font Size - A - A - A]
* பேராசிரியர் கரீம் தெரிவிப்பு

தெற்காசிய நாடுகளில் இலங்கையின் கல்வித்தரம் பின்னடைந்துள்ளதாகத் தெரிவிக்கும் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.கரீம் பாடசாலைகளின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் கண்டியில் நடைபெற்ற இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

இலங்கையில் முஸ்லிம்களிடம் தான் அதிகளவு சர்வதேச பாடசாலைகள் உள்ளன. இவை பெரும்பாலும் பணம் சம்பாதிக்கும் நோக்கில் தனிநபர்களினால் நடாத்தப்படுவதால் முஸ்லிம் சமூகத்திற்கு இப்பாடசாலைகள் சாபக்கேடாக மாறியுள்ளன.

உலகில் தனிநபர்களால் எங்கும் பாடசாலைகள் நடாத்தப்படுவதில்லை. தனிநபரினால் பாடசாலையொன்றை நடாத்த முடியுமா என்பது சிந்தனைக்குரிய விடயமாகும்.

தற்போது தெற்காசிய நாடுகளில் இலங்கையின் கல்வித்தரம் பின்னடைந்துள்ளது. நாம் பங்களாதேஷை விடவும் பின்னடைந்த நிலையிலுள்ளோம்.

முன்பு இலங்கை ஆசிரியர்களுக்குப் பிற நாடுகளில் கிராக்கி நிலவியது. ஆனால், தற்போது அந்நிலை இல்லை.

பாடசாலைகளின் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். பாடசாலைகளை தரம் 1 முதல் 5 வரையும், தரம்6 முதல் 11 வரையும் மற்றும் உயர்தர 12 ஆம் 13 ஆம் வகுப்புகளையும் கொண்ட தனித்தனிப் பாடசாலைகளாக மாற்றியமைக்க வேண்டும்.

இதனால், பாடசாலைகளில் நிலவும் வளப்பற்றாக்குறை, பாடசாலை அனுமதி உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை எட்டலாம். ஆனால், பழைய மாணவர் சங்கம் என்ற ஒன்று சகல பாடசாலைகளிலும் இருக்காது. இதனால், முன்பும் பழைய மாணவர் சங்கங்கள் இம்முறையை எதிர்த்தன.

பாடசாலை அதிபர்கள் தம்மிடமுள்ள வளங்களை சிறப்பாக முகாமை செய்யும் திறமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் பல்கலைக்கழகங்களில் மாணவர் வெற்றிடங்கள் பல நிரப்பப்படாமலுள்ளன. தென்கிழக்கு மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத மாணவர் வெற்றிடங்கள் அதிகமாகும்.

இது பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களைப் பெரிதும் பாதிக்கின்றது. மாணவர்களுக்குப் பாடநெறித் தெரிவுகள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருப்பதும் இதற்குரிய முதன்மைக் காரணமாகும் என்றார்.

Email this page Your Opinion Print this page
மடுப் பிரதேசத்தில் கடும் மோதல் திருச்சொரூபத்துடன் குருமார் வெளியேற்றம்
ஹக்கீமின் பாதுகாப்பை வாபஸ் பெற நீதிமன்றின் அனுமதி கோரி மனு
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கும் அவசியம் இல்லை
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சார்பில் மட்டு., அம்பாறை மாவட்டங்களில் வேட்பு மனு
17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை இல்லை
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தை சுற்றியவாறு இராணுவத்தினர் நிற்பதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது
இலங்கைக்கு இந்தியா 1 இலட்சம் தொன் அரிசி
வவுனியா வாரிக்குட்டியூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைவைக்கப்பட்ட கைதிகளே தப்பியோடும்போது சுட்டுக்கொலை
கிழக்கு நிர்வாகத்தை கைப்பற்ற ஆளும்கட்சி முழுமுயற்சி பிரசாரக்களத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள், முதலமைச்சர்கள்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சோதனைச்சாவடி ஊழியர் பலி
மகாவலி `எச்' வலயத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் முற்றாக நாசம், விவசாயிகள் பாதிப்பு
வீடமைப்பு திட்டத்திற்காக நாலந்தவில் 100 ஏக்கர் காணி ஒதுக்கீடு
இறைமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம்
மரண வீட்டுக்கு சென்ற உறவினர்கள் மீது தாக்குதல்; 2 பேர் காயம்; மூவர் கைது
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் போகொல்லாகம விசேட சந்திப்பு
மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை 3 ஆண்டுகளில் நிரப்ப அங்கீகாரம்
காணியை துப்புரவு செய்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர்கள் அச்சுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை
வீதி விபத்தில் வயோதிபர் பலி
ஊடகவியலாளர் குழு வேட்பு மனுத் தாக்கல்
சர்வதேச சுயாதீன நிபுணர் குழு மீது அமைச்சர் போகொல்லாகம குற்றச்சாட்டு
வலிகாமம் மேற்கில் மினிசூறாவளி மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணம்
யாழ்.குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கு விஷேட நடவடிக்கை
ஊழல் மோசடி நிர்வாக சீர்கேடுகளை நிறுத்தவே கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றோம்
இரத்தினபுரியில் இடம் பெறும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை
பணவீக்க அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி கூறும் காரணங்கள்
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்
பேச்சு வார்த்தையூடாக தீர்வு எட்ட காத்திரமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்
பஸ் அடிக்கடி பழுதடைவதால் நெடுந்தீவு மக்கள் கடும் சிரமம்
`போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தேவையான பஸ்கள் இல்லாததால் டிப்போவுக்கு நஷ்டம்'
தெற்காசியாவில் இலங்கையின் கல்வித்தரம் வீழ்ச்சி சர்வதேச பாடசாலைகள் முஸ்லிம்களுக்கு சாபக்கேடு
தோட்டப்புற சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு இருநாள் செயலமர்வை நடத்த ம.ம.மு. ஏற்பாடு
சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் மலையக சமூகம் உருவாக்கப்பட வேண்டும்
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் தமது கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயற்பட வேண்டும்
இடம்பெயர்ந்தோர், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு புத்தாண்டிற்கு முன் உலருணவு நிவாரணத்தை வழங்கவும்
3 சந்தைகளுக்கான புதிய கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிக்க 3 கோடியே 92 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் வலய கல்விப் பணிமனைக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம்
யுத்தத்தை காட்டி மக்களின் பணப்பையினுள் அரசு கைவைக்க இடமளிக்க மாட்டோம்
தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றியாவது மண்சரிவால் பாதிப்புற்றோருக்கு இடம் வழங்க வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com