போக்குவரத்து சேவையில் ஈடுபடுவதற்கு தேவையானளவு பஸ் வண்டிகள் இன்மையால் நஷ்டத்தில் இயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கெக்கிராவ போக்குவரத்து சபை பஸ் டிப்போ முகாமையாளர் ஏ.எம். பியதாச தெரிவித்தார்.
தினமும் 17314 கிலோமீற்றர் தூரம் போக்குவரத்துச் சேவையில் பஸ்களை ஈடுபடுத்த வேண்டிய தேவை இருப்பதனால் அதற்கேற்ப கால அட்டவணையும் போடப்பட்டுள்ளது. எனினும், தேவையானளவு பஸ் வண்டிகள் இன்மையினால் நாளாந்தம் 8500 கிலோமீற்றர் தூரமே தற்போது பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனால், மாதாந்த வருமானத்திலும் பார்க்க செலவு அதிகரித்துள்ளது.
கெக்கிராவ டிப்போவில் 223 ஊழியர்கள் சேவையாற்றுகின்றனர். இவர்களுக்கான மாதாந்த சம்பளத்துக்கு மட்டும் மாதந்தோறும் இருபத்தொன்பது இலட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா செலவிடப்படுகிறது. எரிபொருள் செலவுகள் ஏனைய செலவுகளுக்கு மாதாந்தம் எண்பது இலட்சம் ரூபா ஒதுக்க வேண்டியுள்ளது. எனினும், டிப்போவின் மொத்த மாதாந்த வருமானம் எழுபத்துமூன்று இலட்சம் ரூபா மட்டுமே. இந்நிலை தொடர்ந்தால் நஷ்டமடையும் வீதம் மேலும் பன்மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் டிப்போ முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.