Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பணவீக்க அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி கூறும் காரணங்கள்
[04 - April - 2008] [Font Size - A - A - A]
இலங்கையில் பணவீக்கம் அதிகரித்துச் செல்வதற்கான காரணங்களை விளக்கி, மத்திய வங்கியின் புள்ளி விபரத் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உள்நாடு மற்றும் சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை காரணங்காட்டி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

அதிகரித்துச் செல்லும் இந்த பணவீக்கத்தின் போக்குகள் சர்வதேச நாடுகளின் அக்கறைக்குரிய ஒருவிடயமாக மாறியிருப்பதுடன், குறிப்பாக மூன்று காரணிகளால், பணவீக்கம் வளர்ச்சியடைந்து செல்கின்றது.

எல்லாவற்றையும் விட இந்தியா, சீனா போன்ற நாடுகளில் நுகர்வின் தேவை அதிகரித்துள்ள நிலைமைகள், அதேபோன்று எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துச் செல்வதால் அதன் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புகள் பணவீக்கத்திற்கான பிரதான காரணங்களாகும்.

இரண்டாவதாக பூகோள ரீதியாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாக, கோதுமை, பாலுணவு உற்பத்தி என்பவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் பயிர்செய்கை நடவடிக்கைகள் மூலமான விளைச்சல், உற்பத்தியின் அளவு வெகுவாகக் குறைவடைந்தமை காரணமாக அவற்றின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளும் இதற்கான பிரதான காரணமாகும்.

மூன்றாவது எரிபொருட்களுக்கு ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக சீனி, சோளம், கோதுமை, மக்காச் சோளம் மற்றும் தாவர எண்ணெய் வகைகளின் உற்பத்தியில் ஏற்படுத்திய பாதிப்புகளும் அவற்றினூடான விநியோக நெருக்கடிகளும், பணவீக்கத்திற்கான குறிப்பான காரணங்களாக உள்ளன.

இலங்கையின் பணவீக்கத்துக்கான குறிப்பான காரணிகளில் மேற்குறிப்பிட்ட உற்பத்திகளின் இறக்குமதியில் இலங்கை தங்கியிருக்கின்றமையும் பிரதான காரணமாகும்.

பணவீக்க அதிகரிப்பின் பக்க விளைவுகளாக, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய உணவுகளின் விலைகளில் திடீர் ஏற்ற இறக்கங்கள் அடிக்கடி ஏற்படுவதுடன், நாட்டின் நாணயக் கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கப்பால், வெளிநாட்டுக் கொடுக்கல் வாங்கல்களில் ஏற்படும் தளம்பல்கள் மற்றும் கடைப்பிடிக்கப்படும் வரிக் கொள்கைகள் காரணமாகவும் பணவீக்கம் வேகமாக அதிகரித்து செல்கின்றது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Email this page Your Opinion Print this page
மடுப் பிரதேசத்தில் கடும் மோதல் திருச்சொரூபத்துடன் குருமார் வெளியேற்றம்
ஹக்கீமின் பாதுகாப்பை வாபஸ் பெற நீதிமன்றின் அனுமதி கோரி மனு
தேர்தலுக்காக பிள்ளையான் குழுவை நிராயுதபாணியாக்கும் அவசியம் இல்லை
விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சி சார்பில் மட்டு., அம்பாறை மாவட்டங்களில் வேட்பு மனு
17 பேர் படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை இல்லை
மூதூரிலுள்ள அக்ஷன்பாம் அலுவலகத்தை சுற்றியவாறு இராணுவத்தினர் நிற்பதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது
இலங்கைக்கு இந்தியா 1 இலட்சம் தொன் அரிசி
வவுனியா வாரிக்குட்டியூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
கொலைக்குற்றச்சாட்டுகளில் சிறைவைக்கப்பட்ட கைதிகளே தப்பியோடும்போது சுட்டுக்கொலை
கிழக்கு நிர்வாகத்தை கைப்பற்ற ஆளும்கட்சி முழுமுயற்சி பிரசாரக்களத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள், முதலமைச்சர்கள்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சோதனைச்சாவடி ஊழியர் பலி
மகாவலி `எச்' வலயத்தில் 15 ஆயிரம் ஏக்கர் நெல்வயல்கள் முற்றாக நாசம், விவசாயிகள் பாதிப்பு
வீடமைப்பு திட்டத்திற்காக நாலந்தவில் 100 ஏக்கர் காணி ஒதுக்கீடு
இறைமைக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் சர்வதேச மட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பிரசாரம்
மரண வீட்டுக்கு சென்ற உறவினர்கள் மீது தாக்குதல்; 2 பேர் காயம்; மூவர் கைது
பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகத்துடன் அமைச்சர் போகொல்லாகம விசேட சந்திப்பு
மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை 3 ஆண்டுகளில் நிரப்ப அங்கீகாரம்
காணியை துப்புரவு செய்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர்கள் அச்சுறுத்தல்
ஐ.நா. மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானம் எதனையும் நிறைவேற்றவில்லை
வீதி விபத்தில் வயோதிபர் பலி
ஊடகவியலாளர் குழு வேட்பு மனுத் தாக்கல்
சர்வதேச சுயாதீன நிபுணர் குழு மீது அமைச்சர் போகொல்லாகம குற்றச்சாட்டு
வலிகாமம் மேற்கில் மினிசூறாவளி மின்னல் தாக்கியதில் பெண்ணொருவர் மரணம்
யாழ்.குடாநாட்டில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுத்து நிறுத்துவதற்கு விஷேட நடவடிக்கை
ஊழல் மோசடி நிர்வாக சீர்கேடுகளை நிறுத்தவே கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுகின்றோம்
இரத்தினபுரியில் இடம் பெறும் படுகொலைகள் பாலியல் வல்லுறவுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை
பணவீக்க அதிகரிப்பு குறித்து மத்திய வங்கி கூறும் காரணங்கள்
நாட்டில் சமாதானம் ஏற்படுமானால் அபிவிருத்தி பணிகளை செய்யமுடியும்
பேச்சு வார்த்தையூடாக தீர்வு எட்ட காத்திரமான பங்களிப்பை சர்வதேச சமூகம் வழங்கவேண்டும்
பஸ் அடிக்கடி பழுதடைவதால் நெடுந்தீவு மக்கள் கடும் சிரமம்
`போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தேவையான பஸ்கள் இல்லாததால் டிப்போவுக்கு நஷ்டம்'
தெற்காசியாவில் இலங்கையின் கல்வித்தரம் வீழ்ச்சி சர்வதேச பாடசாலைகள் முஸ்லிம்களுக்கு சாபக்கேடு
தோட்டப்புற சமூகத் தலைவர்கள் 600 பேருக்கு இருநாள் செயலமர்வை நடத்த ம.ம.மு. ஏற்பாடு
சவால்களுக்கு முகங் கொடுக்கும் வகையில் மலையக சமூகம் உருவாக்கப்பட வேண்டும்
அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் தமது கடமையையும் பொறுப்பினையும் உணர்ந்து செயற்பட வேண்டும்
இடம்பெயர்ந்தோர், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கு புத்தாண்டிற்கு முன் உலருணவு நிவாரணத்தை வழங்கவும்
3 சந்தைகளுக்கான புதிய கட்டிடத் தொகுதிகளை நிர்மாணிக்க 3 கோடியே 92 இலட்சம் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் வலய கல்விப் பணிமனைக்கு மாகாண முதலமைச்சர் திடீர் விஜயம்
யுத்தத்தை காட்டி மக்களின் பணப்பையினுள் அரசு கைவைக்க இடமளிக்க மாட்டோம்
தோட்டத் தொழிலாளர்களை பலாத்காரமாக வெளியேற்றியாவது மண்சரிவால் பாதிப்புற்றோருக்கு இடம் வழங்க வேண்டும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com