கிழக்கு மாகாண சபை தேர்தலில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் குழுவொன்று சுயேச்சையாக தேர்தல் களத்தில் குதித்துள்ளது. சமாதான ஊடக அமைப்பின் தலைவரும் ஹொலிபீல்ட் விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான எம்.எம்.ஜெஸ்மினை தலைமை வேட்பாளராகக் கொண்டு 12 ஊடகவியலாளர்கள் அடங்கிய குழுவொன்று அம்பாறை கச்சேரியில் தங்களது வேட்பு மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தது.
கிழக்கில் வாழும் மக்களின் அபிலாசைகளையும் கருத்துகளையும் புரிந்துகொள்ள முடியாத அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்படுவதில் இருந்து தவறியமையினாலேயே சுயேச்சை குழுவாக இத்தேர்தலில் போட்டியிட வேண்டி ஏற்பட்டுள்ளதாக முதன்மை வேட்பாளர் எம்.எம்.ஜெஸ்மின் தெரிவித்தார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் ஊடகவியலாளர் குழுவொன்று தனியாக தேர்தலில் குதித்திருப்பது இதுவே முதற் தடவையாகும்.