கொழும்பு - எம்பிலிப்பிட்டிய பிரதான வீதியில் கொடக்கவெல எனுமிடத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற வீதிவிபத்தில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக கொடக்கவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எம்.எம்.அஸீஸ் (வயது -90) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு சென்ற வானொன்றும், எதிரே வந்த தனியார் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதென தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இரத்தினபுரி பலாங்கொடை பிரதான வீதியில் ஓபநாயக்க எனுமிடத்தில் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் யுவதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அவசரப்பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இவ்விபத்தில் அப்புகஸ்தென்ன தோட்டப் பகுதியை சேர்ந்த ஜே.குமாரி என்பவரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பான விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் மேற் கொண்டுவருகின்றனர்.