நுரைச்சேலை அனல் மின்சார நிலையம் அமைக்கப்படவுள்ள நிலத்தில் வசித்து வந்த குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட மாற்றுக் காணியை துப்புரவு செய்து கொண்டிருந்த போது வாகனமொன்றில் வந்தவர்கள் அம்மக்களை அச்சுறுத்திச் சென்றுள்ளமை தொடர்பாகப் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாற்றுக் காணியாக தளுவ நிர்மலபுர பகுதியில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 ஏக்கர் வீதம் அரசு வழங்கியது இவ்வாறு வழங்கப்பட்ட மாற்றுக் காணி தனியார் ஒருவருடையது என தெரிவித்து, அங்கு வந்தவர்கள், காணியில் துப்புரவு பணிகளை செய்து கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் அங்கிருந்த உபகரணங்களையும் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளைத் தமக்கு அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட இக்குடும்பங்கள் நுரைச்சேலை அனல் மின் நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டமொன்றில் நேற்று வியாழக்கிழமை ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.