-எம்.ஏ.எம். நிலாம்-
நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் நிலவி வரும் மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை அடுத்த மூன்று வருடங்களில் நிரப்புவதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரமளிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று முன்தினம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த மேற்படி அமைச்சரவைப்பத்திரத்தில் நாட்டில் முஸ்லிம் பாடசாலைகளில் 595 மௌலவி ஆசிரிய வெற்றிடங்கள் நீண்ட காலமாக காணப்படுவதாகவும் 2001 ஆம் ஆண்டு முதல் இந்த வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வெற்றிடங்களை மூன்று வருட காலத்துக்குள் படிப்படியாக தேவைக்கேற்ற விதத்தில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுதாற்கும் ஆகக் கூடுதலாக கிழக்கில் காணப்படும் 194 வெற்றிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமையளிக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.