சொந்தமான காணிகளின்றி இருக்கும் அரச அதிகாரிகளுக்கும் மாத்தளை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் வீடமைப்புத் திட்டமொன்று அமைக்க நாலந்த தொழில் பேட்டைக்கு அண்மையில் 100 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காணி சீர்திருத்த ஆணைக் குழுவிடமிருந்து இக்காணி சுவீகரிக்கப்பட்ட பின் சம்பந்தப்பட்டவர்களுக்கு இக்காணி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. காணி வழங்கப்படும்போது ஊடகவியலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமெனவும் காணி பகிர்ந்தளிப்பின்போது அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மாத்தளை மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்ட பின் வீடுகள் அமைத்துக் கொள்ள வங்கி கடனுதவிகளும் வழங்கப்படவுள்ளது. இதேவேளை, ஊடகவியலாளர்கள் தாங்கள் வசித்துவரும் பகுதியிலேயே தேர்தல் தொகுதி மட்டத்தில் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இல்லையேல் வீடமைப்புத் திட்டங்கள் அமைத்து கொடுக்கப்பட வேண்டுமென விடுத்துள்ள கோரிக்கையையும் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.