* தம்பகல்லவில் சம்பவம்
சோதனைச் சாவடியிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்ததனால் சோதனைச் சாவடியில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த தம்பகல்ல பொலிஸ் சோதனைச் சாவடியில் நேற்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.
சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தமது துப்பாக்கியை சீர் பண்ணிக்கொண்டிருந்தபோதே துப்பாக்கி எதிர்பாராதவிதமாக வெடித்துள்ளதாக விசாரணையின்போது தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தம்பகல்ல பொலிஸார் தீவிர புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.