வவுனியா வாரிக்குட்டியூர் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை நண்பகல் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.வாரிக்குட்டியூர் கிராமத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருக்கையிலேயே தாலிக்குளம் வாசியான கைலாசன் காந்திராசா
(வயது 45) என்பவர் இனம் தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு மரணவிசாரணை நடைபெற்றது. இறந்தவரின் மனைவி நீதிவான் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் நேற்று பகல் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில், துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் பெண் ஒருவரின் சடலம் வவுனியா சவச்சாலையில் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பம்மைமடுவில் முன்னணிப் பிரதேசத்தில் நடைபெற்ற மோதலில் மரணமான பெண் புலி உறுப்பினரின் சடலம் இதுவென படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.