அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள போதிலும், இலங்கைக்கு மட்டும் ஒரு இலட்சம் தொன் அரிசியை ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
இலங்கையில் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் 15,000 ஹெக்டெயர் பயிர்கள் சேதமடைந்துவிட்டன. எனவே அரிசியை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யுமாறு இலங்கை அரசு இந்திய அரசைக் கேட்டுக் கொண்டது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 70,000 தொன் அரிசியை இலங்கை வாங்கியது. அரிசி, கோதுமை உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டதால், விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
பற்றாக்குறையைப் போக்க அரிசி வழங்குமாறு பாகிஸ்தான் மற்றும் மியன்மார் நாட்டு அரசுகளிடமும் இலங்கை கேட்டுள்ளது.