கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான இறுதித் தினம் நேற்றாகும். நேற்று வியாழன் வேட்புமனுத்தாக்கல் செய்ய வருகைதந்த ஐ.தே.க.சார்பில் டாக்டர் ஜயலத் ஜயவர்தன, பைஷல் காசீம், பஷீர் சேகுதாவூத், தமிழ்மக்கள் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு சார்பாக இராதுரைரத்தினம், ஜே.வி.பி.சார்பாக ஏ.எம்.முஸம்பில் எம்.பி.,ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் பட்டியலின் தலைமை வேட்பாளரான முன்னாள் திருமலை மாவட்ட எம்.பி. எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தனா, இரண்டாவது வேட்பாளரான ஹஸன் மௌலவி ஆகியோர் அமைச்சர்கள் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, நஜீப் அப்துல் மஜீத், றிசாட் பதியுதீன் வடமத்திய மாகாண முதலமைச்சர், ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ.எச்.எம்.அஸ்வர், மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா ஆகியோர் வேட்பாளர்களுடன் காணப்படுவதையும், ஆளும் கட்சிப் பட்டியலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களில் ஒருவரான டாக்டர் கு.ஹேமச்சந்திரா (இடது) வுடன் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உரையாடுவதையும் ஐ.தே.கட்சியின் திருமலை மாவட்ட தலைமை வேட்பாளரான ரவூப் ஹக்கீம், வேட்புமனுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள 2 ஆவது வேட்பாளரான திருமலை மாவட்ட முன்னாள் (ஐ.தே.க.) எம்.பி.சின்ன மஹ்ரூப், முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. எம்.எஸ்.தௌபீக், ஹாஜா முகைதீன், எஸ்.ஹேவகே ஆகியோருடன் வேட்புமனுத்தாக்கல் செய்த பின்னர் வெளியே வருவதையும் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் செய்தியாளர்கள் மத்தியில் பேசுவதையும் இங்கு காணலாம்.