Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
இந்திய அணிக்கு வாய்ப்பாயிருக்கும் ஆமதாபாத் ஆடுகளம்
[04 - April - 2008] [Font Size - A - A - A]
இந்திய - தென் னாபிரிக்க அணிகளிடையே நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான 2 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறும் ஆமதாபாத் மைதானத்தில் இந்திய, தென்னாபிரிக்க அணிகள் இதுவரை ஒரு டெஸ்டில் மட்டுமே மோதியுள்ளன. 1996 இல் நடந்த இப்போட்டியில் இந்தியா 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

இங்கு அதிக ஓட்டம் எடுத்த அணி என்ற பெருமையை இந்தியர்கள் தட்டிச் செல்கின்றனர். 1999 இல் நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 583 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 1996 இல் இங்கு நடந்த டெஸ்டின் முதல் இனிங்ஸில் தென்னாபிரிக்கா எடுத்த 244 ஓட்டங்களே அதன் அதிக ஓட்டமாகும்.

இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் வீரர் என்ற பெருமையை சச்சின் பெறுகிறார். இவர் இங்கு 6 டெஸ்டில் விளையாடி 2 சதம் உட்பட 473 ஓட்டங்கள் எடுத்துள்ளார். அடுத்த இரண்டு இடங்களில் டிராவிட் (431), இலக்ஷ்மன் (354) இருக்கின்றனர்.

இங்கு இரண்டு வீரர்கள் இரட்டை சதம் அடித்துள்ளனர். அவர்கள் இந்தியாவின் டிராவிட் (222) மற்றும் சச்சின் (217).

ஆமதாபாத் ஆடுகளத்தில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இந்தியாவின் கும்பிளே. இவர் இங்கு 6 டெஸ்டில் விளையாடி 35 விக்கெட கைப்பற்றியுள்ளார். ஹர்பஜன் 4 போட்டியில் 22, கபில் 3 போட்டியில் 14 விக்கெட் வீழ்த்தி அடுத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

ஆமதாபாத் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் கைகொடுக்கும் என அதன் பராமரிப்பாளர் திராஜ் பார்சனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "ஆடுகளம் சுழற்பந்துக்கு உதவும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னை டெஸ்ட் போல் இம்முறை பந்து வீச்சாளர்கள் ஏமாற்றமடையமாட்டார்கள்" என்றார்.

Email this page Your Opinion Print this page
தென்னாபிரிக்கவுடனான 2 ஆவது டெஸ்ட் 76 ஓட்டங்களுக்குள் இந்திய அணி சுருண்டது
தென்னாபிரிக்காவின் கிப்ஸ் மீது குற்றச்சாட்டு
ஊக்கப்படுத்தும் சுற்றுப் போட்டிகள்
சொனி எரிக்சன் டெனிஸ் போட்டி அரையிறுதி ஆட்டத்துக்கு செரீனா தகுதி
அக்தர் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் கிலானி கடும் வற்புறுத்து
ஐ.சி.சி.யின் புதிய தலைமை செயலதிகாரியாக தென்னாபிரிக்காவின் லார்கட் நியமிக்கப்படுவார்
இந்திய அணிக்கு வாய்ப்பாயிருக்கும் ஆமதாபாத் ஆடுகளம்
முன்னாள் அணித் தலைவர்கள் அக்தரின் தடைக்கு கடும் எதிர்ப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com