Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 04, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
சொனி எரிக்சன் டெனிஸ் போட்டி அரையிறுதி ஆட்டத்துக்கு செரீனா தகுதி
[04 - April - 2008] [Font Size - A - A - A]
மியாமியில் நடந்து வரும் சர்வதேச டெனிஸ் போட்டியின் காலிறுதியில் முதல் நிலை வீராங்கனை ஹெனினை, செரீனா அபாரமாக வீழ்த்தினார்.

அமெரிக்காவின் மியாமி நகரில் சொனி எரிக்சன் சர்வதேச டெனிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் 8 - ஆம் நிலை வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், உலகின் நமபர் வன் வீராங்கனை பெல்ஜியத்தின் ஜஸ்ரின் ஹெனினை எதிர்கொண்டார்.

இதில் ஆவேசமான ஷொட்டுகளை விளாசிய செரீனா 6 - 2, 6 - 0 என்ற நேர் செட் கணக்கில் ஹெனினை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி 20 நிமிடங்கள் நடந்தது.

மற்றொரு காலிறுதியில் செரீனாவின் அக்காவும், விம்பிள்டன் சம்பியனுமான வீனஸ் வில்லியம்ஸ் தோல்வியடைந்தார். அவரை தற்போதைய சம்பியன் ரஷ்யாவின் குஸ்னட்சோவா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். குஸ்னட்சோர்வின் வெற்றிக்கு ஒரு மணி 27 நிமிடங்கள் தேவைப்பட்டன. தாம் தோல்வியடைந்தாலும் தனது தங்கை செரீனா வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக வீனஸ் கூறினார்.

பெடரர் முன்னேற்றம்

ஆண்கள் ஒற்றையர் 4-ஆவது உலகின் முதல் நிலை வீரர் சுவிச்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அர்ஜென்ரீனாவின் ஜோஸ் அகசுசோவை 7-6,(5) 6-2 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். அமெரிக்காவின் ஆன்டி ரோடிக், ஸ்பெயினின் ரபெல் நடால், அமெரிக்காவின் ஜேம்ஸ் பிளாக், ரஷியாவின் டெய்டென்கோ ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றனர்.

இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், அவுஸ்திரேலியாவின் பால் ஹான்லே ஜோடி, இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமாசின் மார்க் நவ்லஸ் இணையுடன் பலப்பரீட்சை நடத்தவிருக்கிறது.

Email this page Your Opinion Print this page
தென்னாபிரிக்கவுடனான 2 ஆவது டெஸ்ட் 76 ஓட்டங்களுக்குள் இந்திய அணி சுருண்டது
தென்னாபிரிக்காவின் கிப்ஸ் மீது குற்றச்சாட்டு
ஊக்கப்படுத்தும் சுற்றுப் போட்டிகள்
சொனி எரிக்சன் டெனிஸ் போட்டி அரையிறுதி ஆட்டத்துக்கு செரீனா தகுதி
அக்தர் மீதான தடையை உடனடியாக நீக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் கிலானி கடும் வற்புறுத்து
ஐ.சி.சி.யின் புதிய தலைமை செயலதிகாரியாக தென்னாபிரிக்காவின் லார்கட் நியமிக்கப்படுவார்
இந்திய அணிக்கு வாய்ப்பாயிருக்கும் ஆமதாபாத் ஆடுகளம்
முன்னாள் அணித் தலைவர்கள் அக்தரின் தடைக்கு கடும் எதிர்ப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com