தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ் நடத்தை விதிமுறைகளை மீறி செயற்பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
கிப்ஸ் குடித்து விட்டு கார் ஓட்டிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தென்னாபிரிக்க கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
"கிப்ஸ் கிரிக்கெட் வீரர்களுக்கான நடத்தை விதிமுறைகளை மீறியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது கிப்ஸ் சக வீரர் ஒருவர் மீது கடுமையான சொற்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிப்ஸ் நேற்று தென்னாபிரிக்க கிரிக்கெட் சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு முன் ஆஜராக வேண்டுமென்றும் அவர் மீதான நடவடிக்கை குறித்து இதில் முடிவு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே குடித்து விட்டு கார் ஓட்டிய வழக்கில் கிப்ஸ் கேப் டவுன் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.