Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
ஜனநாயகக்கட்சி வேட்பாளருக்கான போட்டி விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
[05 - April - 2008] [Font Size - A - A - A]
* சபாநாயகர் வேண்டுகோள்

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளரை நியமிப்பதற்கான போட்டியை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமென சபாநாயகரும் ஜனநாயகக் கட்சியின் பிரமுகருமான பெலோசி கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் நான்காம் திகதி நடைபெறுகின்றது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பாக ஜோன் மைக்கெய்ன் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் ஜனநாயகக்கட்சி சார்பாக போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் மற்றும் பராக் ஒபாமா இடையே கடும் போட்டி நிலவுகின்றது.

இந்நிலையில் தொலைக் காட்சிச் சேவை ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த பெலோசி மேலும் தெரிவிக்கையில்;

ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சி வெற்றிபெற வேண்டுமானால் உடனடியாக ஒரு வேட்பாளர் முன்பு கட்சி திரளவேண்டும்.

அதனால் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பாக வேட்பாளரை நியமிப்பதற்கான போட்டியை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்தால் ஜனநாயகக்கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் சாத்தியங்கள் அதிகரிக்குமெனத் தெரிவித்தார்.

இதே வேளை,ஒபாமாவின் ஆதரவாளர்கள் ஹிலாரி தோல்வியை ஒப்புக்கொண்டு போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஆனால் ஆதரவாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த ஒபாமா ஹிலாரி விரும்பும் வரை போட்டியில் நீடிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹிலாரி தேர்தல் பிரசாரத்துக்கு தேவையான நிதி இல்லாமல் திண்டாடுவதுடன் அவர் செலுத்தவேண்டிய கோடிக்கணக்கான ரூபாய்க்கான பற்றுச் சீட்டுகள் இன்னமும் கொடுப்பனவுகள் வழங்கப்படாமல் உள்ளது.

Email this page Your Opinion Print this page
ஜனநாயகக்கட்சி வேட்பாளருக்கான போட்டி விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்
ஆங்கில மயமாக மாறும் லெனினின் சொந்த ஊர்
தேர்தலில் தோல்வியடைந்தால் மன்னரின் மாளிகையை முற்றுகையிடுவோம்
பிரிட்டிஷ் பிரதமரை விட அதிகளவில் சம்பளம் பெறும் பிரிட்டன் வாழ் இந்தியர்
சீனாவின் ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பினால் முஷாரப்பை பதவிநீக்கம் செய்யலாம்
மீண்டும் சர்வராக பழைய வாழ்க்கையை தொடரும் லண்டனை சேர்ந்த கோடீஸ்வரர்
சீனாவின் ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா புறக்கணிக்க வேண்டும்
அமெரிக்க நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் வெளிநாட்டினரை சென்றடைவதை தடுத்து நிறுத்துவேன்
அமெ. விமான நிலையத்தில் வெடி பொருட்களை கடத்த முயன்ற நபர் கைது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com