Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய சிறந்த ஜனநாயக நிலை கிழக்கில் காணப்படுகிறது
[05 - April - 2008] [Font Size - A - A - A]
* புளொட் தலைவர் சித்தார்த்தன் தெரிவிப்பு

கிழக்கு மாகாண சபை தேர்தலில் பத்மநாபா அணி ஈ.பி.ஆர்.எல்.எப் தமிழர் விடுதலை கூட்டணி, புளொட் அமைப்பு ஆகியன இணைந்து தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பாக இம்முறை போட்டியிடுகின்றனர். தமிழர் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும் என்பதே எமது இலட்சியமாகும். அதுவே நியாயமுமாகும் என்று புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும், மாநகர சபையின் உறுப்பினர் இரா-துரைரத்தினமும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த புளொட் தலைவர் சித்தார்த்தனும் முதலமைச்சர் முதன்மை வேட்பாளர் இரா-துரைரத்தினமும் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;

தமிழர்களினால் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்த சட்டமூலத்தின் பிரகாரம் தமிழர் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படல் வேண்டும். தமிழ் ஜனநாயக தேசிய கூட்டமைப்பாக மூன்று கட்சிகள் இணைந்து இத்தேர்தலில் போட்டியிடவுள்ளோம். ஈ.பி.டி.பி. தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேச தயாராகவுள்ளோம். ஏனைய இடதுசாரிகட்சிகளுடன் பேசவுள்ளோம். எமது இணக்கப்பாட்டுக்கு உடன்படுமிடத்து அவர்களையும் இணைத்து போட்டியிடுவோம் இல்லையென்றால் நாம் எடுத்த முடிவின்படி போட்டியிட்டு தமிழ் பேசும் மக்களுக்கான உரிமையை பெற்றுக்கொடுக்க தயங்கமாட்டோம்.

ஜனநாயகமான நிலை தற்போது கிழக்கில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தாம் விரும்பியவர்கள் தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கின்ற நல்ல சூழ்நிலை இங்கு காணப்படுகின்றது. இந்த நல்ல சூழ்நிலையில் நியாயமான நீதியான, சுதந்திரமான முறையில் கிழக்குமாகாண சபை தேர்தல் நடைபெறவேண்டும். அப்போது தான் அது ஒரு ஜனநாயகமான தேர்தலாக அமையும். இதனை அரசாங்கம் உறுதிசெய்யும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளோம்.

பல்வேறு வழிகளாலும் 1986 ஆம் ஆண்டு முதல் ஆயுதரீதியாக ஏற்பட்ட மோதல்களால் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கான முறையில் அகதிகளாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொடுத்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டு அகதி வாழ்க்கை தொடர்கின்ற நிலையே இன்றும் காணப்படுகின்றது. இந்நிலை மாற்றப்படவேண்டும். மக்கள் நிம்மதியாக வாழ்கின்ற நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்.

தமிழரின் அவலநிலையை போக்க கிழக்கு மாகாண சபை தேர்தலை சரியாக நாம் பயன்படுத்த வேண்டும். வடக்கு கிழக்கு சட்டப்படி பிரிக்கப்பட்டுள்ளது. பிரிக்கப்பட்ட தனியான கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு எமது நம்பிக்கையை உருவாக்க வேண்டும். அதன் பின்னரே தேவையான தருணத்தில் வட - கிழக்கு இணைப்பை வலியுறுத்துவோம்.

தற்போது ஐந்து இடதுசாரி கட்சிகளும் எமது கூட்டமைப்பு கட்சியோடு இணைந்து போட்டியிட முன்வருவதாக தெரிவித்துள்ளது. முஸ்லிம்களுக்கான உரிமைகளை வழங்கவும், சிங்களவர்களுக்கான உரிமைகளை வழங்கவும் நாம் நியாயமான முறையில் நடந்து கொள்வோம்.

இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கான ஒரு முக்கியமான தமது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற தேர்தலாகவே கருதப்படுவதால் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் நமது நம்பிக்கையானவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் தமது எதிர்காலத்தை மாற்றியமைக்க முடியுமென்று கூறினர்.

Email this page Your Opinion Print this page
`மேற்குலகின் போதனை இலங்கைக்கு வேண்டாம்'
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான மடுப்பகுதியை போர்ப்பூமியாக படையினர் மாற்றுவதாக குற்றச்சாட்டு
வவுனியாவில் நேற்று மாலை இரு இளைஞர் சுட்டுக் கொலை
முகமாலைப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
பிள்ளையான் குழு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கும் சட்டச்சரத்து எது?
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வேட்புமனு
த.ம.வி.பு. ஆயுதங்களின்றி இருப்பதே எமது விருப்பம்
ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றமில்லை
முதலமைச்சர் பதவி முக்கியமல்ல; அரசின் அராஜகத்தை தோற்கடிக்கவே களம் இறங்கினோம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேரணி
அகில இலங்கை தமிழர் கூட்டணி தலைமை வேட்பாளராக விக்னேஸ்வரன்
3 மு.கா. தலைவர்களை தலைமை வேட்பாளர்களாக ஐ.தே.க. நியமித்திருப்பது வங்குரோத்தின் வெளிப்பாடு
பெண் கிராம சேவை அதிகாரி மீது அசிட் வீச்சு எதிர்ப்பு தெரிவித்து தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 5 மாணவர் 10 பாடங்களில் சித்தி
திருமலை சண்முகா இந்து மகளிரில் 12 மாணவிகளுக்கு 10ஏ, 9 பேருக்கு 9 ஏ
மதவாச்சி ரயில் நிலையத்தில் தமிழ் பயணிகள் எதிர்நோக்கும் அவலம்
ஷ்ரீ கோணேஸ்வராவில் 4 பேருக்கு 10 ஏ
அநுராதபுரம் விவேகானந்தா, ஸாஹிரா மாணவர்கள் சிறந்த பெறுபேறு
தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்பாடு
க.பொ.த.சாதாரண தரத்தில் 46 பேர் சித்தி
பல்வேறு வியூகங்களின் அடிப்படையில்தான் ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைந்தது
மடுமாதாவின் திருவுருவச் சிலையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை
பிரிட்டிஷ் உதவி வெளிவிவகார அமைச்சருடன் ரோஹித போகொல்லாகம சந்திப்பு
சோனியா வருகையால் அகதி முகாம்களுக்கு `சீல்'
கட்டுக்கரைக்குளத்தில் விமானத் தாக்குதல்
கைதானவர்களில் சிலர் விடுவிப்பு பலர் பூஸாவுக்கு அனுப்பி வைப்பு
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
ஒதுக்கீட்டு நிதியை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
மாகாண சபை தேர்தலை அமைதியாக நடத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் பணிப்பு
பாலமோட்டையில் கடும் மோதல்
காந்தி சிலையடியில் சூட்டுச்சத்தம் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறினார்
இரத்தினபுரியில் இடி மின்னலுடன் மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
துப்பாக்கி குண்டுகளால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க முடியாது
தொழிலாளருக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கையெடுக்க பணிப்பு
நேர்மையான அரசியலின் மூலமே மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்
`இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை இரு பிரதான கட்சிகளும் ஏற்க வேண்டும்'
முஸ்லிம் காங்கிரஸுக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கு மிக விரைவில் துரித நடவடிக்கையெடுக்கப்படும்
தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய சிறந்த ஜனநாயக நிலை கிழக்கில் காணப்படுகிறது
கண்ணாடி அறைகளுக்குள் இருக்கும் அதிகாரிகளால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை தராது
குடாநாட்டில் சோளப் பயிர்ச்செய்கையை அதிகரிக்க விவசாயப் பகுதி நடவடிக்கை
அக்தரிடம் 33 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com