Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
நேர்மையான அரசியலின் மூலமே மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்
[05 - April - 2008] [Font Size - A - A - A]
* அமைச்சர் ஜயரட்ன தெரிவிப்பு

இந்நாட்டில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் என்ற வேறுபாடின்றி சகல இன மக்களும் சகல உரிமைகளையும் அனுபவிக்கும் உரிமையுள்ளவர்களாவர். இனம் என்பதற்கு அப்பால் மனிதன் என்பது உயர்வானதாகும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

கம்பளை கல்கெடியாவ சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் பத்தாண்டு நிறைவையொட்டி அண்மையில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; மனிதன் தன் மனச்சாட்சிக்கு விரோதமின்றி செயற்பட வேண்டும். நேர்மையான அரசியலின் மூலம் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். நாம் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பயனுள்ளவர்களாகவும் இருத்தல் அவசியமாகும்.

இலங்கை வளம் பொருந்தியநாடாக இருப்பினும் பயன்படுத்தப்படாத பெருமளவு வளங்கள் காணப்படுகின்றன. மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களை ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களுக்கு இலவச உதவிகளை வழங்கிப் பழக்கப்படுத்திவிட்டனர்.

இதனால் மக்கள் மத்தியில் சுயமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து விட்டது. தன்னம்பிக்கை அற்றுப்போகின்றது.

ஜப்பானியர் ஓர் அங்குல நிலத்தில் கூட எவ்வாறு பயன்பெற முடியும் என்று சிந்திக்கின்னர். ஆனால் இலங்கையில் பெருமளவு நிலம் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படாமலுள்ளன.

2000 ஆம் ஆண்டில் அரிசியை ஏற்றுமதி செய்த இலங்கை 2008 ஆம் ஆண்டில் அரிசியை இறக்குமதி செய்யும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படாத நிலங்களை கையேற்று பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோருக்கு கையளிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இன்று தேங்காயின் விலை உயரும் போதுதான் மக்கள் தென்னங்கன்றுகளை நடவேண்டும் என்று சிந்திக்கின்றனர். எனவே தேங்காயின் விலை உயர்வையிட்டு பெரிதாகக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் மூலம் நாடெங்கும் பல்வேறு வேலைத்திட்டங்களின் கீழ் எண்பது ரூபாவான தென்னங்கன்றுகள் மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் இலவசமாகப் பசளைகளையும் வழங்குகின்றோம்.

2008 இல் நாடு பூராகவும் ஒரு கோடி தென்னங்கன்றுகளை நடவுள்ளோம் என்றார்.

Email this page Your Opinion Print this page
`மேற்குலகின் போதனை இலங்கைக்கு வேண்டாம்'
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான மடுப்பகுதியை போர்ப்பூமியாக படையினர் மாற்றுவதாக குற்றச்சாட்டு
வவுனியாவில் நேற்று மாலை இரு இளைஞர் சுட்டுக் கொலை
முகமாலைப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
பிள்ளையான் குழு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கும் சட்டச்சரத்து எது?
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வேட்புமனு
த.ம.வி.பு. ஆயுதங்களின்றி இருப்பதே எமது விருப்பம்
ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றமில்லை
முதலமைச்சர் பதவி முக்கியமல்ல; அரசின் அராஜகத்தை தோற்கடிக்கவே களம் இறங்கினோம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேரணி
அகில இலங்கை தமிழர் கூட்டணி தலைமை வேட்பாளராக விக்னேஸ்வரன்
3 மு.கா. தலைவர்களை தலைமை வேட்பாளர்களாக ஐ.தே.க. நியமித்திருப்பது வங்குரோத்தின் வெளிப்பாடு
பெண் கிராம சேவை அதிகாரி மீது அசிட் வீச்சு எதிர்ப்பு தெரிவித்து தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 5 மாணவர் 10 பாடங்களில் சித்தி
திருமலை சண்முகா இந்து மகளிரில் 12 மாணவிகளுக்கு 10ஏ, 9 பேருக்கு 9 ஏ
மதவாச்சி ரயில் நிலையத்தில் தமிழ் பயணிகள் எதிர்நோக்கும் அவலம்
ஷ்ரீ கோணேஸ்வராவில் 4 பேருக்கு 10 ஏ
அநுராதபுரம் விவேகானந்தா, ஸாஹிரா மாணவர்கள் சிறந்த பெறுபேறு
தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்பாடு
க.பொ.த.சாதாரண தரத்தில் 46 பேர் சித்தி
பல்வேறு வியூகங்களின் அடிப்படையில்தான் ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைந்தது
மடுமாதாவின் திருவுருவச் சிலையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை
பிரிட்டிஷ் உதவி வெளிவிவகார அமைச்சருடன் ரோஹித போகொல்லாகம சந்திப்பு
சோனியா வருகையால் அகதி முகாம்களுக்கு `சீல்'
கட்டுக்கரைக்குளத்தில் விமானத் தாக்குதல்
கைதானவர்களில் சிலர் விடுவிப்பு பலர் பூஸாவுக்கு அனுப்பி வைப்பு
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
ஒதுக்கீட்டு நிதியை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
மாகாண சபை தேர்தலை அமைதியாக நடத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் பணிப்பு
பாலமோட்டையில் கடும் மோதல்
காந்தி சிலையடியில் சூட்டுச்சத்தம் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறினார்
இரத்தினபுரியில் இடி மின்னலுடன் மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
துப்பாக்கி குண்டுகளால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க முடியாது
தொழிலாளருக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கையெடுக்க பணிப்பு
நேர்மையான அரசியலின் மூலமே மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்
`இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை இரு பிரதான கட்சிகளும் ஏற்க வேண்டும்'
முஸ்லிம் காங்கிரஸுக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கு மிக விரைவில் துரித நடவடிக்கையெடுக்கப்படும்
தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய சிறந்த ஜனநாயக நிலை கிழக்கில் காணப்படுகிறது
கண்ணாடி அறைகளுக்குள் இருக்கும் அதிகாரிகளால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை தராது
குடாநாட்டில் சோளப் பயிர்ச்செய்கையை அதிகரிக்க விவசாயப் பகுதி நடவடிக்கை
அக்தரிடம் 33 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com