மன்னார், பாலமோட்டைப் பகுதியை நோக்கி படையினர் நேற்றுக் காலை 11.45 மணியளவில் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர்.
இதையடுத்து முன்னேற முயன்ற படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. காலை படையினர் விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ஆர்.பி.ஜி. போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட தாக்குதல் இருபது நிமிடங்கள் வரை நீடித்தது.
இத்தாக்குதலில் இரு தரப்பினரும் சரமாரியான மோட்டார்த் தாக்குதல்களை மேற்கொண்டனர். இத்தாக்குதல் தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.