இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா நேற்று வன்னி இராணுவ தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.
வன்னிப் பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைவரங்கள் பற்றி அறிந்து கொள்ளும் நோக்குடன் விஜயம் மேற்கொண்ட இராணுவத் தளபதியை வன்னிப் பகுதியின் தலைமைக் கட்டளை முகாமான வவுனியா இராணுவ முகாமில் வன்னி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மற்றும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.
மேலும், படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள படை நடவடிக்கைகளில் மழையின் தாக்கம் என்பது பற்றியும் அத்துடன் படையினரின் நலன்புரித் தேவைகள் பற்றியும் கலந்துரையாடியதுடன், படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்புத் தொடர்பாகவும் அப்பகுதியில் காணப்படும் கண்ணி வெடிகள் மற்றும் அதனை மீட்கும் பணிகளில் ஈடுபடும் படையினர் போன்ற விடயங்கள் பற்றியும் கலந்துரையாடியுள்ளார்.