|
மன்னார், கட்டுக்கரைக்குளம் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆட்லெறி ஏவுதளமொன்றின் மீது விமானப்படையினரின் எம்.ஐ.24 ரக ஹெலிகொப்டர்கள் குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றுப் பகல் 12.30 மணியாவில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களின் அடிப்படையில் இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன், குறிக்கப்பட்ட இலக்குகள் மீது சரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |