|
காங்கிரஸ் தலைவர் சோனியா தமிழகம் வருவதையொட்டி இலங்கை அகதிகள் முகாம்கள் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவரது வருகையையொட்டி கடலோரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களிலுள்ள அகதிகள் முகாம்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அகதிகள் யாரும் வெளியே செல்லக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அகதிகள் முகாம்களில் இருக்கிறார்களா என்பது குறித்து காலை, மாலை நேரங்களில் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். கடலோரத்தில் சந்தேகமான நபர்கள் சுற்றித்திரிகின்றனரா என்பதை கண்காணிக்க கடலோர பொலிஸாரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். |