Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, April 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
திருமலை சண்முகா இந்து மகளிரில் 12 மாணவிகளுக்கு 10ஏ, 9 பேருக்கு 9 ஏ
[05 - April - 2008] [Font Size - A - A - A]
அண்மையில் வெளியிடப்பட்ட 2007 க.பொ.த. சாதாரண தரப்பத்திரப் பரீட்சை பெறுபேறுகளின்படி திருகோணமலை ஷ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியிலிருந்து தோற்றிய 107 மாணவிகளில் 12 பேர் பத்துப் பாடங்களில் `ஏ' சித்தி பெற்று திருகோணமலை மாவட்டத்தில் மகத்தான சாதனையை நிலைநாட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் 12 மாணவியரில் ஒருவரான டிரஞ்சலா தேவி பத்மநாதன் அகில இலங்கை ரீதியான வகைப்படுத்தலில் 5 ஆவது இடத்தைச் சுவீகரித்துள்ளார். 10 ஏ பெற்ற ஏனைய மாணவியரின் பெயர்கள் வருமாறு: டிக்சலாதேவி பத்மநாதன், பிரித்திகா பேரானந்தம், ஹில்மியா மவுறூப் றசானா முகமட் செரிவ், றிகானா முகமட் கலாம், இனியாள் பேராசிரியன், ஜெயப்பிரண்யா ஆறுமுகம், நிவேதா பரசுபாணி, கருணலதா நடராசா, கிஷாந்தி நடராஜபிள்ளை, சுஜித்தா ரவீந்திரன்.

09 `ஏ' சித்திகளைப் பெற்ற ஒன்பது மாணவிகளின் பெயர்கள் வருமாறு:

ரஜீந்தினி ராஜரட்னம், அனுஷா கலாதரன், ஷரினி சுவேந்திரன், இனியா ஷ்ரீஸ்கந்தராஜா, பவித்திரா யோகராஜா, ஷாலினி மகேந்திரராஜா, மதுரிகா ரவீந்திரன், யசோபிரியா ராமமூர்த்தி, தர்ஷாயினி ரவீந்திரன்.

71 மாணவிகள் தமிழ்மொழியிலும் 55 பேர் கணிதத்திலும், 28 பேர் விஞ்ஞானத்திலும், 49 பேர் சமூகக்கல்வியிலும், 45 பேர் ஆங்கிலத்திலும் `ஏ' சித்திகளைப் பெற்றனர். கடந்த வருடம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பாடத்திற்கு தோற்றிய 30 மாணவிகளில் 23 பேர் `ஏ' சித்திகளைப் பெற்றனர்.

பரீட்சைக்குத் தோற்றிய 107 மாணவிகளில் 103 பேர் க.பொ.த. உயர்தர வகுப்பில் சேர்ந்து கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். ஷ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி திருமலை மாவட்டத்தில் முதல் தடவையாக இச்சாதனையை நிலைநாட்டியிருப்பதாக கல்லூரி அதிபர் திருமதி சந்திரா பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
`மேற்குலகின் போதனை இலங்கைக்கு வேண்டாம்'
கிறிஸ்தவர்களின் புனிதத் தலமான மடுப்பகுதியை போர்ப்பூமியாக படையினர் மாற்றுவதாக குற்றச்சாட்டு
வவுனியாவில் நேற்று மாலை இரு இளைஞர் சுட்டுக் கொலை
முகமாலைப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
பிள்ளையான் குழு ஆயுதம் வைத்திருக்க அனுமதியளிக்கும் சட்டச்சரத்து எது?
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவும் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி வேட்புமனு
த.ம.வி.பு. ஆயுதங்களின்றி இருப்பதே எமது விருப்பம்
ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் மாற்றமில்லை
முதலமைச்சர் பதவி முக்கியமல்ல; அரசின் அராஜகத்தை தோற்கடிக்கவே களம் இறங்கினோம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேரணி
அகில இலங்கை தமிழர் கூட்டணி தலைமை வேட்பாளராக விக்னேஸ்வரன்
3 மு.கா. தலைவர்களை தலைமை வேட்பாளர்களாக ஐ.தே.க. நியமித்திருப்பது வங்குரோத்தின் வெளிப்பாடு
பெண் கிராம சேவை அதிகாரி மீது அசிட் வீச்சு எதிர்ப்பு தெரிவித்து தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம்
யாழ். மாவட்டத்தில் இம்முறை எழுபது மாணவர்கள் `10ஏ' சித்தி
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 5 மாணவர் 10 பாடங்களில் சித்தி
திருமலை சண்முகா இந்து மகளிரில் 12 மாணவிகளுக்கு 10ஏ, 9 பேருக்கு 9 ஏ
மதவாச்சி ரயில் நிலையத்தில் தமிழ் பயணிகள் எதிர்நோக்கும் அவலம்
ஷ்ரீ கோணேஸ்வராவில் 4 பேருக்கு 10 ஏ
அநுராதபுரம் விவேகானந்தா, ஸாஹிரா மாணவர்கள் சிறந்த பெறுபேறு
தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க ஏற்பாடு
க.பொ.த.சாதாரண தரத்தில் 46 பேர் சித்தி
பல்வேறு வியூகங்களின் அடிப்படையில்தான் ஐ.தே.க.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டிணைந்தது
மடுமாதாவின் திருவுருவச் சிலையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை
பிரிட்டிஷ் உதவி வெளிவிவகார அமைச்சருடன் ரோஹித போகொல்லாகம சந்திப்பு
சோனியா வருகையால் அகதி முகாம்களுக்கு `சீல்'
கட்டுக்கரைக்குளத்தில் விமானத் தாக்குதல்
கைதானவர்களில் சிலர் விடுவிப்பு பலர் பூஸாவுக்கு அனுப்பி வைப்பு
இராணுவத் தளபதி வன்னி விஜயம்
ஒதுக்கீட்டு நிதியை நிர்வகிப்பது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
மாகாண சபை தேர்தலை அமைதியாக நடத்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் பணிப்பு
பாலமோட்டையில் கடும் மோதல்
காந்தி சிலையடியில் சூட்டுச்சத்தம் கேட்டதாக துறைமுகப்பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கூறினார்
இரத்தினபுரியில் இடி மின்னலுடன் மழை இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு
துப்பாக்கி குண்டுகளால் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க முடியாது
தொழிலாளருக்கான கொடுப்பனவுகளை உரிய காலத்தில் வழங்க நடவடிக்கையெடுக்க பணிப்பு
நேர்மையான அரசியலின் மூலமே மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்
`இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொறுப்பை இரு பிரதான கட்சிகளும் ஏற்க வேண்டும்'
முஸ்லிம் காங்கிரஸுக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும்
மௌலவி ஆசிரியர் நியமனத்தை வழங்குவதற்கு மிக விரைவில் துரித நடவடிக்கையெடுக்கப்படும்
தாம் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய சிறந்த ஜனநாயக நிலை கிழக்கில் காணப்படுகிறது
கண்ணாடி அறைகளுக்குள் இருக்கும் அதிகாரிகளால் செயற்படுத்தப்படும் திட்டங்கள் வெற்றியை தராது
குடாநாட்டில் சோளப் பயிர்ச்செய்கையை அதிகரிக்க விவசாயப் பகுதி நடவடிக்கை
அக்தரிடம் 33 இலட்சம் டொலர் நஷ்டஈடு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழக்கு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com