க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைகளின் முடிவுகளின்படி கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவிகள் 10 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தியான "ஏ" பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் ஏ.எச்.ஸனாஹுல் பர்னாஸ், எம்.ஏ.எம்.அர்ஷாத், எம்.பி.டி.எல்.லுத்பி பாஸில், எம்.வை.ஏ.ஐ.எம்.யூசுப், எஸ்.ஏ.ஸர்பான் அஹமட் ஆகியோர் 10 பாடங்களிலும் ஏ.ஏ.எம்.அம்ஜத், ஏ.எம்.ஹஸ்ஸான் , எம்.ஏ.எல்.எம்.ஸஜாஸ் ஆகியோர் 9 பாடங்களிலும் ஏ.எம்.எம்.அஸாம், எஸ்.எம்.றஸ்மி, ஏ.பி.நௌஸாட், எப்.எம்.ஸிபான் ஆகியோர் 8 பாடங்களிலும் ஏ.எம்.ஆஷிக், ஏ.ஏ.எம்.ஸஸி, எம்.ஐ.எம்.ஸப்றாஸ் , எம்.எச்.எம் . அஸாருடீன் ஆகியோர் 7 பாடங்களிலும் அதிதிறமைச் சித்தியைப் பெற்றுள்ளதுடன், 5 மாணவர்கள் 6 பாடங்களிலும் 8 மாணவர்கள் 5 பாடங்களிலும் அதி திறமைச் சித்தியைப் பெற்றுள்ளனர்.
மேற்படி பரீட்சை முடிவுகளின்படி க.பொ.த.உயர்தர கலை, வர்த்தக, விஞ்ஞானப் பிரிவுகளில் கல்வி கற்க 200 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் திருமதி மர்ஜுனா ஏ.காதர் தெரிவித்துள்ளதுடன், இந்தப் பரீட்சை முடிவுகளை சிறந்த முறையில் பெறுவதற்குக் காரணமாக அமைந்த மாணவர்கள் , ஆசிரியர்கள் , பகுதித் தலைவர் ஏ.எம்.சித்தீக் உள்ளிட்ட அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.