யாழ். மாவட்டத்தில் இம்முறை க.பொ.த (சாதாரணதரப்) பரீட்சையில் எழுபது மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் அதிவிசேட சித்தி (10 ஏ) பெற்றுள்ளனர்.
இதில் வேம்படி மகளிர் கல்லூரியில் 22 மாணவிகள் `10 ஏ' பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பரீட்சை முடிவுகளுக்கமைய வேம்படி மகளிர் கல்லூரியில் 22 பேரும், யாழ்.இந்துக் கல்லூரியில் 9 பேரும் , கொக்குவில் இந்துக் கல்லூரியில் 6 பேரும் , பருத்தித்துறை மெதடிஸ்த கல்லூரியில் 11 பேரும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் 5 பேரும், யாழ். இந்து மகளிர் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி , நெல்லியடி ம.ம.வி., சாவகச்சேரி இந்துக்கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் பாடசாலையில் 17 பேரும் `10 ஏ' சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இதைவிட வேம்படி மகளிர் கல்லூரியில் 56 மாணவிகள் `9 ஏ' யும், 37 மாணவிகள் `8 ஏ' யும், 26 மாணவிகள் `7 ஏ'யும் , 20 மாணவிகள் `6 ஏ ' யும் 23 மாணவிகள் `5 ஏ' யும் பெற்றுள்ளனர்.
இந்தப் பாடசாலையிலிருந்து இப்பரீட் சைக்கு 219 மாணவிகள் தோற்றி அதில் அனைவரும் உயர்தர வகுப்புக்கு சித்தி பெற்றதும் 169 மாணவிகள் கணித பாடத்தில் `ஏ' சித்தி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இதைவிட குடாநாட்டிலிருந்து பெருமளவு மாணவர்கள் உயர்தர வகுப்புக்கு சித்தி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.