|
அகில இலங்கை தமிழர் கூட்டணியின் திருகோணமலை மாவட்டத் தலைமை வேட்பாளராக கூட்டணியின் தலைவரான டாக்டர். கே. விக்னேஸ்வரன் போட்டியிடு கின்றார். அவரே கடந்த வியாழக்கிழமை திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அவருடன் திருமதி கதரின் சேவியர் மற்றும் கே.வி. ஷர்மிளா ஆகிய பெண் வேட்பாளரும் திருகோணமலை மாவட்டச் செயலகத்துக்கு வந்திருந்தனர்.
இது இவ்வாறிருக்க திருகோணமலை மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட நான்கு அரசியல் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப். (பந்மநாபா பிரிவு) ஆகியன சேர்ந்து உருவாக்கியதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. |