யாழ்ப்பாணம் முகமாலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை விமானப் படை விமானங்கள் கடும் விமானத்தாக்குதலை நடத்தியுள்ளன.
முகமாலைக்கு தென் கிழக்கே புலோப்பளை பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம்கள் மீதே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்றுக்காலை 6.20 மணிக்கும் 6.40 மணிக்குமிடையிலேயே இரண்டுக்கும் மேற்பட்ட விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளன.
வான் வழிக் கண்காணிப்பின் மூலமாகப் பெற்ற சரியான தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் விமானப்படையினர் தெரிவித்துள்ளனர்.