வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கூமாங்குளத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இருவரே கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூமாங்குளம் அம்மன் கோவிலுக்கு மேற்கே நேற்று மாலை 6 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன் மற்றவர் படுகாயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இது குறித்து வவுனியா மாவட்ட பதில் நீதிபதி எம்.சிற்றம்பலத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவரது பணிப்பின் பேரில் இரு உடல்களும் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வரப்பட்டது.
இன்று காலை இது தொடர்பான மரண விசாரணை நடைபெறவுள்ளது.