கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளைக் கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தமிழ்த் திரையுலகத்தினர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பெப்சி விஜயன், சத்தியராஜ், சரத்குமார், ரஜினிகாந், மனோரமா, விஜயகுமார், த்ரிஷா, நயன்தாரா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருப்பதை இங்கு காணலாம்.
கொழும்பு கொண்டினன்டல் ஹோட்டலில் நேற்று வெள்ளிக்கிழமை வன்முறை மற்றும் சுகாதாரம் தொடர்பான அறிக்கை வெளியீடு நடைபெற்றது. அறிக்கையை டாக்டர் ஜீ.ஆர்.சில்வா அமைச்சர் நிமால் சிறிபால டி.சில்வாவிடம் கையளிப்பதையும் அருகில் உலக சுகாதார நிறுவன அதிகாரிகளையும் இங்கு காண்கிறீர்கள்.
திருகோணமலை நகரசபையுடன் இணைந்து அமெரிக்காவின் யு.எஸ்.எயிட் மற்றும் கிரேக்க நாட்டின் ஹெலனிக் எயிட் ஆகியவற்றின் நிதியுதவியுடன் செக் நாட்டின் பீப்பிள் இன் நீட் அமைப்பினால் 5 இலட்சம் அமெரிக்க டொலர் செலவில் புனரமைக்கப்பட்ட, திருமலை நகரில் அனுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள நவீன சந்தையின் திறப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) காலை நடைபெற்றபோது யு.எஸ்.எயிட் இலங்கைப் பணிப்பாளர் திருமதி றிபெக்கா டபிள்யு.கொஹ்ன் நினைவுக்கல்லை திரைநீக்கம் செய்து வைப்பதையும் பிரத அதிதிகளாகப் பங்குபற்றிய திருமலை நகரசபைத் தலைவர் எஸ்.கௌரி முகுந்தன், திருமலை அரச அதிபர் ரஞ்சித் டி.சில்வா, ஹெலனிக் எயிட் அமைப்பின் ஆலோசகர் ஜோர்ஜ் எஸ்.பிலிப்போஸ் ஆகியோர் அமர்ந்திருப்பதையும் நவீன சந்தைக் கட்டிடத்தையும் இங்கு காணலாம்.