புசல்லாவை நிவ் பீகொக் தோட்டத்தில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகிய தொழிலாளர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று மாலை பெய்த இடி, மின்னலுடன் கூடிய கடும் மழையினால் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாலை வேளைகளில் பெய்து வரும் இடி, மின்னலுடன் கூடிய கடும் மழையினால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் எனவே மழைக்காலங்களில் வேலை நேரத்தை குறைத்து தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தோட்ட நிர்வாகமும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.