உழவு இயந்திரம் ஒன்று குளத்தினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் அதனை செலுத்திச் சென்ற சாரதி, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கலேவெல பொலிஸ் பிரிவிலுள்ள "யட்டிகல்பொத்த" என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு நோக்கி இரவு 8 மணியளவில் சென்றுகொண்டிருந்ததாகவும் இடையிலுள்ள `துராவெவ' என்ற குளக்கட்டை தாண்டிச் சென்று கொண்டிருந்த வேளையிலேயே உழவு இயந்திரம் அக்குளத்தினுள் விழுந்து குடைசாய்ந்திருந்ததாகவும் இரவு 9.30 மணியளவில் சாரதியின் சடலம் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டதாகவும் விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் உயிரிழந்த உழவு இயந்திரச் சாரதியான கருணாவீர விக்ரமசிங்க (வயது 53) என்பவர் ஆறு பிள்ளைகளின் தந்தையாவார். சம்பவம் நடைபெற்ற வேளையில் இவர் மதுபோதையிலிருந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கலேவெல மாவட்ட வைத்தியசாலை பிரேத அறையில் மரண விசாரணைகளை கொஸ்வத்த மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளும் இடம்பெற்றன. கலேவெல பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.