இந்திய- தென்னாபிரிக்க அணிகளிடையே ஆமதாபாத்தில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 90 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
இதன் மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆபிரிக்க அணி 1-0 என முன்னிலையிலுள்ளது.
2 ஆவது டெஸ்ட் போட்டியில் முதலாவது இனிங்ஸில் இந்திய அணி 76 ஓட்டங்களையும் தென் ஆபிரிக்க அணி முதலாவது இனிங்ஸில் 494 ஓட்டங்களையும் பெற்றன. இதில் டி வில்லியர்ஸ்- 217, கலிஸ்- 132 ஓட்டங்களைப் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து இனிங்ஸ் தோல்வியை தவிர்க்க 418 ஓட்டங்களைப் பெறவேண்டுமென்ற நிலையில் ஆடிய இந்திய அணி நேற்று 3 ஆம் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 328 ஓட்டங்களையே பெற்று இனிங்ஸாலும் 90 ஓட்டங்களாலும் தோல்வியடைந்தது.
2 ஆவது இனிங்ஸில் இந்திய அணி சார்பில் கங்குலி- 87, தோனி- 52, பதான் ஆட்டமிழக்காது- 43, லக்ஷ்மன்- 35, உதிரிகளாக 24 ஓட்டங்களும் பெறப்பட்டன.
பந்து வீச்சில் நிற்னி-3, ஸ்ரைன்-3, மோர்கல்-2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.