Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஜே.வி.பி. ஒரு குடும்பமென்பதால் அதில் பிரச்சினைகள் வருவது சகஜம்
[06 - April - 2008] [Font Size - A - A - A]
ஏப்ரல் வீரர்கள் தினத்தில் சோமவன்ச தெரிவிப்பு; நிகழ்வை விமல் வீரவன்ச புறக்கணிப்பு மக்கள் விடுதலை முன்னணி ஒரு குடும்பம். குடும்பம் என்றால் பிரச்சினைகள் இருக்கவே செய்யும். இது வழமையானது. எமது கட்சி எவரையும் தண்டிப்பதற்காக வளர்ந்த கட்சியல்ல. ஆனால், நாம் தண்டனை வழங்கினால் அது வேறு கட்சிகளை விட மிகவும் கடுமையானதாகவிருக்குமென ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.

37 ஆவது ஏப்ரல் வீரர்கள் தின ஞாபகார்த்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் நடைபெற்ற போது அதில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சோமவன்ச அமரசிங்க மேலும் கூறியதாவது;

மக்கள் விடுதலை முன்னணி ஒரு குடும்பம், இக்குடும்பத்தில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை ஆகியோர் உள்ளனர். இவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம்.

இலங்கை அரசாங்கம் தம்மிடம் மட்டுமே ஆயுதங்களை வாங்க வேண்டும் என இந்திய அரசு நிபந்தனை விதிக்கிறது. இலங்கை, இந்தியாவின் மாநிலம் அல்ல என்பதை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் விடுதலை முன்னணி என்ற ஒரு கட்சி இல்லாவிட்டால் இலங்கை, இந்தியாவின் கால்பந்தாட்ட மைதானமாக மாறி இருக்கும். நோர்வே உட்பட ஏகாதிபத்திய நாடுகளின் மேலாதிக்க கோட்டையாக இலங்கை மாறியிருக்கும். இதனை நாமே தடுத்து நிறுத்தி இருக்கிறோம்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு பூரண சுதந்திரம் வழங்க வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அம்மக்கள் பிரபாகரனிடம் இருந்து பிரிந்து வருவார்கள். மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வந்த பத்தாயிரம் குளங்களை அமைக்கும் திட்டத்தை அமுல்படுத்தி இருந்தால் இன்று அரிசி விலை இந்த அளவிற்கு உயர்ந்திருக்கமாட்டாது.

கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன ஐக்கிய முன்னணியும் படுதோல்வி அடையும். பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவதற்காகவே அரசாங்கம் இந்த தேர்தலை நடத்துகிறது. பொதுத் தேர்தல் ஒன்று நடந்தால் அரசாங்கத்தை தோல்வி அடையச் செய்து நாம் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.

இந்த அரசாங்கத்தின் ஊழல் மோசடி, களவு, கொள்ளை ஆகியன அதிகரித்து விட்டன. நாம் கட்சியை கைப்பற்றியவுடன் இவற்றை எல்லாம் விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவோம்.

இதேவேளை, ஜே.வி.பி. கட்சியின் பிரசாரச் செயலாளர் பதவியிலிருந்தும் மத்திய குழு உறுப்பினர் உரிமையில் இருந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

Email this page Your Opinion Print this page
12 ஆவது அகவையில் தினக்குரல்
பேரினவாதத்திற்கு துணைபோவோருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இடமளிக்கக்கூடாது
`நிக்கொட்' பணிப்பாளர் சுட்டுக்கொலை
3 மாதங்களில் 400 படையினர் பலி; 800 பேர் படுகாயம் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை காணவில்லை
பாலமோட்டையில் படையினர் முன்னேற முயற்சி;முறியடித்ததாக புலிகள் தெரிவிப்பு
சர்வகட்சி பிரதிநிதிகள் பிரிட்டன் பயணம்
இரு புதிய எம்.பி.க்கள் இந்த வாரம் பதவியேற்பர்
பண்டிகைக்கால முற்பண அதிகரிப்பு கோரிக்கை அரசாங்கம் நிராகரிப்பு; ஊழியர்கள் ஏமாற்றம்
மீள்குடியேற்றத்தை முந்தும் அவசரத் தேர்தல்
குடாநாட்டில் இருவருடங்களில் 740 பேரைக் காணவில்லை
மலையகத்தில் மாலை நேரங்களில் இடியுடன் மழை விவசாயிகள், தொழிலாளர்கள் பலரும் பெரும்பாதிப்பு
பிரித்தானிய பாராளுமன்ற குழு உறுப்பினர் புத்தளம் உள்ளூர் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு மீட்பு
ஆற்றில் மிதந்து வந்த சடலம் மீட்கப்பட்டது
கொச்சிக்கடையில் வர்த்தகர் கொலை
மலையகத்தில் நடைபெறவுள்ள தொழிற்சங்க அரசியற் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள்
கம்பஹாவில் தேடுதல்; 9 சிங்களவர் கைது
ஜே.வி.பி. ஒரு குடும்பமென்பதால் அதில் பிரச்சினைகள் வருவது சகஜம்
வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு
இந்திய அணி இனிங்ஸால் தோல்வி
உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகி சாரதி பலி
மின்னல் தாக்கி தொழிலாளர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு வீதியில் நடமாடுவதால் விபத்துக்கள் அதிகரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com