கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது ஒன்பது சிங்கள இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரையும் பொலிசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த இந்த சிங்கள இளைஞர்கள் தொழில்வாய்ப்புப் பெற்று இங்கு தங்கியிருந்தனர் எனவும், ஆனால் வதிவிட ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாததால் கைது செய்யப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
கம்பஹாவில் பொலிசாரின் இந்த நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.