Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மலையகத்தில் நடைபெறவுள்ள தொழிற்சங்க அரசியற் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள்
[06 - April - 2008] [Font Size - A - A - A]
மலையகத் தொழிற்சங்க அரசியற் கட்சிகள் எதிர்வரும் மே தினத்தினை முன்னிட்டு மலையக நகரங்களில் மே தினக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது மே தினக் கூட்டத்தினை அட்டன் நகரில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, மலையக மக்கள் முன்னணியும் தனது மே தினக் கூட்டத்தினை அட்டனில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்துள்ளதாக தெரியவருகின்றது.

ம.ம.முன்னணியும் இ.தொ.கா.வும் அட்டன் நகரில் மே தினக் கூட்டத்தினை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதால் இந்த இரண்டு அமைப்புகளிடையே முறுகல் நிலை ஏற்படலாமெனத் தெரிய வருகின்றது.

மேலும் அட்டன் நகரில் மே தினக் கூட்டம் நடத்துவதற்கு தமது அமைப்புக்கு அனுமதி மறுக்கப்படுமானால் நீதி மன்றத்தை நாட வேண்டிய நிலைமை ஏற்படுமென மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தினக் கூட்டம் இந்தச் சங்கத்தின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான பி.திகாம்பரம் தலைமையில் தலவாக்கலை நகரில் இடம்பெறவுள்ளது.

தொழிலாளர் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் நானுஓயா நகரில் இடம்பெறவுள்ளது.

இந்த மே தினக் கூட்டத்துக்கு தொழிலாளர் விடுதலை முன்னணியின் டி.அய்யாத்துரையும் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபைத் தமிழ்க் கல்வியமைச்சருமான எஸ்.அருள்சாமியும் தலைமை தாங்கவுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியே வாழுகின்ற மலைகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் வகையில் தனது மே தினப் பொதுக்கூட்டத்தினை இரத்தினபுரி நகரில் ஏற்பாடு செய்வதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் மே தினப் பொதுக்கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் குருநாகல் நகரில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம் பொகவந்தலாவை நகரில் இடம்பெறவுள்ளது.

Email this page Your Opinion Print this page
12 ஆவது அகவையில் தினக்குரல்
பேரினவாதத்திற்கு துணைபோவோருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இடமளிக்கக்கூடாது
`நிக்கொட்' பணிப்பாளர் சுட்டுக்கொலை
3 மாதங்களில் 400 படையினர் பலி; 800 பேர் படுகாயம் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை காணவில்லை
பாலமோட்டையில் படையினர் முன்னேற முயற்சி;முறியடித்ததாக புலிகள் தெரிவிப்பு
சர்வகட்சி பிரதிநிதிகள் பிரிட்டன் பயணம்
இரு புதிய எம்.பி.க்கள் இந்த வாரம் பதவியேற்பர்
பண்டிகைக்கால முற்பண அதிகரிப்பு கோரிக்கை அரசாங்கம் நிராகரிப்பு; ஊழியர்கள் ஏமாற்றம்
மீள்குடியேற்றத்தை முந்தும் அவசரத் தேர்தல்
குடாநாட்டில் இருவருடங்களில் 740 பேரைக் காணவில்லை
மலையகத்தில் மாலை நேரங்களில் இடியுடன் மழை விவசாயிகள், தொழிலாளர்கள் பலரும் பெரும்பாதிப்பு
பிரித்தானிய பாராளுமன்ற குழு உறுப்பினர் புத்தளம் உள்ளூர் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு மீட்பு
ஆற்றில் மிதந்து வந்த சடலம் மீட்கப்பட்டது
கொச்சிக்கடையில் வர்த்தகர் கொலை
மலையகத்தில் நடைபெறவுள்ள தொழிற்சங்க அரசியற் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள்
கம்பஹாவில் தேடுதல்; 9 சிங்களவர் கைது
ஜே.வி.பி. ஒரு குடும்பமென்பதால் அதில் பிரச்சினைகள் வருவது சகஜம்
வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு
இந்திய அணி இனிங்ஸால் தோல்வி
உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகி சாரதி பலி
மின்னல் தாக்கி தொழிலாளர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு வீதியில் நடமாடுவதால் விபத்துக்கள் அதிகரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com