அநுராதபுரம், மல்வத்து ஓயா ஆற்றில் மிதந்து வந்து கரை யொதுங்கிய சடலமொன்றை வெள்ளிக்கிழமை மாலை கண்டெடுத்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சரத் பிரேம தெரிவித்துள்ளார்.
பிரதேச வாசி ஒருவரின் தகவலுக்கமைய அந்தப் பகுதிக்கு விரைந்த பொலிஸ் குழுவே இந்தச் சடலத்தைக் கண்டெடுத்துள்ளது.
முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க இப் பெண்ணின் சடலம் இளஞ்சிவப்பு பாவாடையுடனும் நீலநிற மேற்சட்டையுடனும் காணப்பட்டது.
இனங்காணப்படாத இச்சடலம் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.