ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்திலிருந்து குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலைக்கு அருகாமையில் குண்டொன்று கிடப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலையடுத்து பல்கலைக்கழகம் விரைந்த குண்டு செயலிழக்கச் வைக்கும் பிரிவினர் அச்சுற்றுப்புறத்திலிருந்து மாணவர்களை உடனடியாக வெளியேற்றிவிட்டு குண்டை செயலிழக்க வைத்துள்ளனர். இதேவேளை பல்கலைக்கழக வளாகத்தில் எவ்வாறு குண்டு கொண்டுவரப்பட்டது என்பது பற்றி மேலதிக விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக அநுராதபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.