Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மலையகத்தில் மாலை நேரங்களில் இடியுடன் மழை விவசாயிகள், தொழிலாளர்கள் பலரும் பெரும்பாதிப்பு
[06 - April - 2008] [Font Size - A - A - A]
நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மாலை வேளைகளில் தொடர்ச்சியான அடைமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

இடி, மின்னலுடன் கூடிய இந்த அடைமழையால் அடிக்கடி மின்சாரத் தடையும் ஏற்பட்டு வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவை, நோர்வூட், மஸ்கெலியா, அட்டன், டயகம, அக்கரப்பத்தனை, நுவரெலியா, இராகலை போன்ற பிரதேசங்களில் பெய்துவருகின்ற அடைமழையால் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

ஆற்றோரப் பகுதி விவசாயப் பயிர்ச் செய்கைகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் பாரிய நஷ்டத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன், தோட்டத் தொழிலாளர்கள் தமது வேலைத் தளங்களிலும் இந்த மழையினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, இந்த மழையினால் காசல்ரீ, மவுசாகலை, நோட்டன் பிரிஜ் ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றது.

இந்த நிலையில் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி, கம்பளை, கண்டி உட்பட பல்வேறு பகுதிகளிலும் மாலை வேளையிலேயே அடைமழை பெய்து வருகின்றது.

நாவலப்பிட்டி பகுதியில் பெய்த அடைமழையினால் நாவலப்பிட்டி ஜயசுந்தர கிராமப் பகுதியில் சில குடியிருப்புகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

மேலும், மழை வீழ்ச்சி அதிகரிக்கின்றபோது நாவலப்பிட்டி நகரில் கம்பளை வீதி அடிக்கடி வெள்ள நீரில் மூழ்கி விடுவதால் போக்குவரத்துகள் சில மணிநேரத்துக்குத் தடைப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இதேவேளை, இடி, மின்னல் அடிக்கடி ஏற்படுவதால் மின்னிணைப்பு, தொலைத்தொடர்பு இணைப்புகளில் அடிக்கடி தடை ஏற்பட்டு வருகின்றது.

மேலும், கம்பளை, குருந்துவத்தை பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகிய மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Email this page Your Opinion Print this page
12 ஆவது அகவையில் தினக்குரல்
பேரினவாதத்திற்கு துணைபோவோருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இடமளிக்கக்கூடாது
`நிக்கொட்' பணிப்பாளர் சுட்டுக்கொலை
3 மாதங்களில் 400 படையினர் பலி; 800 பேர் படுகாயம் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை காணவில்லை
பாலமோட்டையில் படையினர் முன்னேற முயற்சி;முறியடித்ததாக புலிகள் தெரிவிப்பு
சர்வகட்சி பிரதிநிதிகள் பிரிட்டன் பயணம்
இரு புதிய எம்.பி.க்கள் இந்த வாரம் பதவியேற்பர்
பண்டிகைக்கால முற்பண அதிகரிப்பு கோரிக்கை அரசாங்கம் நிராகரிப்பு; ஊழியர்கள் ஏமாற்றம்
மீள்குடியேற்றத்தை முந்தும் அவசரத் தேர்தல்
குடாநாட்டில் இருவருடங்களில் 740 பேரைக் காணவில்லை
மலையகத்தில் மாலை நேரங்களில் இடியுடன் மழை விவசாயிகள், தொழிலாளர்கள் பலரும் பெரும்பாதிப்பு
பிரித்தானிய பாராளுமன்ற குழு உறுப்பினர் புத்தளம் உள்ளூர் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு மீட்பு
ஆற்றில் மிதந்து வந்த சடலம் மீட்கப்பட்டது
கொச்சிக்கடையில் வர்த்தகர் கொலை
மலையகத்தில் நடைபெறவுள்ள தொழிற்சங்க அரசியற் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள்
கம்பஹாவில் தேடுதல்; 9 சிங்களவர் கைது
ஜே.வி.பி. ஒரு குடும்பமென்பதால் அதில் பிரச்சினைகள் வருவது சகஜம்
வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு
இந்திய அணி இனிங்ஸால் தோல்வி
உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகி சாரதி பலி
மின்னல் தாக்கி தொழிலாளர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு வீதியில் நடமாடுவதால் விபத்துக்கள் அதிகரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com