பாராளுமன்றத்தில் இந்த வாரம் இரண்டு புதிய எம்.பி.க்கள் பதவியேற்கவுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த சொலமன் சிறில், திகாமடுல்ல மாவட்டத்தைச் சேர்ந்த எம்.நவ்சாத் ஆகிய இருவருமே இவ்வாறு புதிய எம்.பி.க்களாக இவ்வாரம் பதவியேற்கவுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சொலமன் சிறில் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் நவ்சாத் ஆகியோர் பதவியேற்பர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எஸ்.சிவநேசன் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவரின் வெற்றிடத்திற்கு சொலமன் சிறில் நியமிக்கப்படவுள்ளார்.
திகாமடுல்ல மாவட்ட எம்.பி.யான ரவூப் ஹக்கீம் தனது எம்.பி. பதவியிலிருந்து ராஜிநாமா செய்ததையடுத்து அவரின் வெற்றிடத்திற்கு நவ்சாத்தும் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.