அம்பாறை மாவட்ட `நிக்கொட்' திட்டமிடல் பணிப்பாளர் ரி.மகேஸ்வரன் (46 வயது) நேற்று சனிக்கிழமை காலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
காரைதீவு-6இல் உள்ள தனது வீட்டிலிருந்து இவர் நேற்றுக் காலை 6.45 மணியளவில் அட்டாளைச்சேனையிலுள்ள அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போதே சுட்டுக்கொல்லப்பட்டார்.
அட்டாளைச்சேனை முல்லைத்தீவு கிஜிரா பாடசாலை வீதியிலேயே இவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இது குறித்து அப்பகுதி கிராம சேவகர் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அங்கு வந்த பொலிசார் துப்பாக்கிச் சூட்டுகாயங்களுடன் கிடந்த அவரது சடலத்தை மரண விசாரனையின் பின்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியாசாலைக் கொண்டுசென்றனர்.
நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் இவரது பெற்றோர் சடலத்தை அடையாளம் காட்டியதையடுத்து பிரேத பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.