Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பேரினவாதத்திற்கு துணைபோவோருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இடமளிக்கக்கூடாது
[06 - April - 2008] [Font Size - A - A - A]
* யுத்த மனநிலையை தோற்கடிக்க முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் யுத்த மனோபாவத்தைத் தோற்கடிக்கும் சிறந்த சாதனமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பயன் படுத்த தமிழர்களும், முஸ்லிம்களும் முன்வர வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதுடன், முஸ்லிம் முதலமைச்சர் குறித்து தமிழர் தரப்பு அச்சப்படத் தேவையில்லையெனவும் சுட்டிக் காட்டியுள்ளது.

இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலி மேலும் தெரிவித்ததாவது;

"கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான முஸ்லிம் காங்கிரஸின் பிரசாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. முழு அளவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட நாங்கள் தீர்மானித்துள்ளோம். சவால் நிறைந்த எமது பயணத்தை ஆயுதக் குழுக்களுக்கோ அல்லது அரச பயங்கரவாதத்திற்கோ அஞ்சி கைவிடத் தயாரில்லை.

தேர்தலானது மிதவாதிகள் கடும் போக்காளர்கள் என்ற இரு தரப்புகளிடையேயானதாக கருதப்படும் நிலையில் மக்கள் தமது வாக்குகளை பெறுமதியானதாக்க வேண்டும்.

இன்றைய அரசாங்கத்தின் யுத்த மனோ பாவத்தை தோற்கடிக்கவும் நில ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிறந்த சாதனமாகவுமே நாம் கருதுகிறோம்.

எனவே, முஸ்லிம் முதலமைச்சர் குறித்து எந்தவொரு தமிழ் சகோதரரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. கிழக்கு மாகாணம் தமிழ், முஸ்லிம்களின் பாரம்பரிய தாயகம். இங்கு சிங்கள பேரினவாதத்திற்கும் அதற்கு துணைபோகும் சக்திகளுக்கும் இடமில்லையென்பது நிரூபிக்கப்பட வேண்டும்.

இனவாதத்தை தூண்டிவிட முயலும் சில தரப்புகள் ஐ.தே.க. - முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு குறித்தும் முஸ்லிம் முதலமைச்சர் பற்றியும் தவறான பிரசாரத்தில் ஈடுபடத் தயாராகி வருகின்றன. இப்பிரசாரங்களுக்கு எந்தவொரு தமிழ்க் குடிமகனும் அடிமையாகி விடக் கூடாது.

முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் நலனில் அக்கறைக் கொண்டதும் அச்சமூகத்திற்கு மிகவும் நெருக்கமானதுமாகும். இதன் சாட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மிதவாத தமிழர்களும் உள்ளனர்" என்றார்.

Email this page Your Opinion Print this page
12 ஆவது அகவையில் தினக்குரல்
பேரினவாதத்திற்கு துணைபோவோருக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இடமளிக்கக்கூடாது
`நிக்கொட்' பணிப்பாளர் சுட்டுக்கொலை
3 மாதங்களில் 400 படையினர் பலி; 800 பேர் படுகாயம் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினரை காணவில்லை
பாலமோட்டையில் படையினர் முன்னேற முயற்சி;முறியடித்ததாக புலிகள் தெரிவிப்பு
சர்வகட்சி பிரதிநிதிகள் பிரிட்டன் பயணம்
இரு புதிய எம்.பி.க்கள் இந்த வாரம் பதவியேற்பர்
பண்டிகைக்கால முற்பண அதிகரிப்பு கோரிக்கை அரசாங்கம் நிராகரிப்பு; ஊழியர்கள் ஏமாற்றம்
மீள்குடியேற்றத்தை முந்தும் அவசரத் தேர்தல்
குடாநாட்டில் இருவருடங்களில் 740 பேரைக் காணவில்லை
மலையகத்தில் மாலை நேரங்களில் இடியுடன் மழை விவசாயிகள், தொழிலாளர்கள் பலரும் பெரும்பாதிப்பு
பிரித்தானிய பாராளுமன்ற குழு உறுப்பினர் புத்தளம் உள்ளூர் பிரதிநிதிகளுடன் சந்திப்பு
ரஜரட்ட பல்கலைக்கழக வளாகத்தில் குண்டு மீட்பு
ஆற்றில் மிதந்து வந்த சடலம் மீட்கப்பட்டது
கொச்சிக்கடையில் வர்த்தகர் கொலை
மலையகத்தில் நடைபெறவுள்ள தொழிற்சங்க அரசியற் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள்
கம்பஹாவில் தேடுதல்; 9 சிங்களவர் கைது
ஜே.வி.பி. ஒரு குடும்பமென்பதால் அதில் பிரச்சினைகள் வருவது சகஜம்
வேலணை மத்திய கல்லூரி மாணவர்கள் சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு
இந்திய அணி இனிங்ஸால் தோல்வி
உழவு இயந்திரம் விபத்துக்குள்ளாகி சாரதி பலி
மின்னல் தாக்கி தொழிலாளர்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதி
கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டு வீதியில் நடமாடுவதால் விபத்துக்கள் அதிகரிப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com