Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, April 06, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஈரானில் நாளை நடைபெறவுள்ள டெவிஸ் கிண்ண டெனிஸ்
[06 - April - 2008] [Font Size - A - A - A]
டெவிஸ் கிண்ண டெனிஸ், 3 ஆம் தரத்துக்கான, ஆசிய பிராந்திய அணிகளுக்கிடையிலான, டெனிஸ் போட்டி இம் மாதம் 7 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை, ஈரான் நாட்டின் தலைநகரான தெகிரானில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் இலங்கை உட்பட மலேஷியா, பாகிஸ்தான், தஜகிஸ்தான், சிரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், ஈரான் ஆகிய நாடுகள் பங்குபற்றுகின்றன.

இப்போட்டியில் பங்குபற்றுவதற்காக 4 வீரர்கள் அடங்கிய இலங்கை குழு நேற்று 5 ஆம் திகதி ஈரானுக்குச் சென்றது. இலங்கை அணிக்கு முன்னாள் வீரர் ரோஹான் சில்வா தலைமைதாங்குகின்றார். போட்டிகளில் பங்குபற்றாத இவர் அணிக்கு மட்டுமே தலைமை தாங்குவது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி பற்றி ரோஹன் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், மேற்படி போட்டியில் பங்கு பற்றும் இலங்கை வீரர்களான, ரஜீப் ராஜபக்ஷ, வீரசூரிய, ஜி.வீரசேகரா, உட்பட சம ஆத்த ஆகிய 4 வீரர்களும் இலங்கையில் முதல்தர டெனிஸ் வீரர்களாகும். டெவிஸ் கிண்ண டெனிஸ் போட்டியில் பங்கு பற்றுவதற்காக, இந்த 4 வீரர்களும் அவிஸ் நாட்டு பயிற்சியாளரின் கீழ் சிறந்த பயிற்சிகளைப் பெற்றுள்ளதுடன், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றி சிறப்பாக விளையாடியுள்ளார்கள். இம்முறை இப்போட்டியில் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகும். இரு நாட்டு அணிகளும், அடுத்தாண்டு டெவிஸ் கிண்ண டெனிஸ் தரம் இரண்டுக்கு தரம் உயர்த்தப்படுவார்கள் என்று ரோஹா டி சில்வா தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
25 ஆவது வருடாந்த பாடசாலை விளையாட்டு விழா
4 ஆயிரம் கிராமங்களில் 4 ஆயிரம் கரபந்தாட்டத் திடல்கள்
மஞ்சி கரபந்தாட்டம்
ஈரானில் நாளை நடைபெறவுள்ள டெவிஸ் கிண்ண டெனிஸ்
ஒலிம்பிக் போட்டி இதுவரை நடைபெற்ற இடங்கள்
மலையகத்தில் மூன்று இடங்களில் டெனிஸ் போட்டிகள் நடைபெறும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com