ஒருவர் உடல் உபாதை காரணமாகத் தக்க சிகிச்சை பெறுவதற்காக கொழும்பிலுள்ள ஒரு வைத்தியசாலைக்குச் சென்றார்.
இவரைப் பரிசோதித்த வைத்தியர் பரிசோதனையின் மத்தியில் இடையிடையே அங்கு தொலைக்காட்சியில் வந்து கொண்டிருந்த கிரிக்கெட் போட்டி காட்சிகளையும் பார்த்து ரசித்துக் கொண்டார். திடீரென `வெரிகுட்' என்று வைத்தியர் சொன்னதும் அவர் தனது உடல் நிலையைத் தான் அப்படிச் சொன்னார் என்று நோயாளி நினைத்துக் கொண்டார். வைத்தியர் தொடர்ந்து `சரியாகிவிடும்' என்றார். இப்படி அந்த வைத்தியர் மாறி மாறி கிரிக்கெட் காட்சியையும் நோயாளியின் உடல் நிலைவரத்தையும் கூறிக்கொண்டிருந்ததால் நோயாளி பலத்த தடுமாற்றமடைந்தாராம்.
வைத்தியப் பரிசோதனையையும் கிரிக்கெட் போட்டி காட்சியையும் மாறிமாறி ஒரே நேரத்தில் பார்ப்பது வைத்தியருக்கு அழகாகுமா?