கனடாவின் கியூபெக் நகரில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் அந்நாட்டின் வரலாற்றில் புகழ்மிக்க கட்டடமொன்று தீக்கிரையாகியுள்ளது.
1884 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இக்கட்டடத்தில் இருந்த வெடிப் பொருள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்து.
இந்த கட்டடத்தில் முன்னர் இராணுவப் பிரிவு செயல்பட்டு வந்தது.
பழமை மிக்க இந்தக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு அருங்காட்சியமாக மாற்றப்பட்டிருந்தது. மிக உயரமான இந்த கட்டடத்தின் மேற்கூரை மரத்தாலானது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக இராணுவ செய்தியாளர் தெரிவித்தார். கட்டடம் தீ பற்றியபோது அதில் எவரும் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தீ பரவியதும் அருகிலிருந்த கட்டடங்களும் தீப்பற்றியதோடு இடிந்து விழுந்தன. செங்கல்லால் கட்டப்பட்ட நுழைவாயில் மட்டும் தற்போது எஞ்சியுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. எனினும், தீ விபத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்பிருக்க வாய்ப்பில்லை என இராணுவ செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு கியூபெக் நகரின் 400 ஆவது ஆண்டுவிழாவை இந்த கட்டடத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்குள் தீ விபத்தில் இக்கட்டடம் முற்றிலும் தேசமடைந்துள்ளது.