Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
சர்வதேச விண்வெளி மையத்துடன் ஆளில்லா விண்கலம் `ஜூல்ஸ் வெர்னே' வெற்றிகரமாக இணைந்தது
[07 - April - 2008] [Font Size - A - A - A]
ஐரோப்பிய விண்வெளி மையத்தினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட `ஜூல்ஸ் வெர்னே' எனப்படும் ஆளில்லா சரக்கு விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச விண்வெளி மையத்துக்கு அமெரிக்க, ரஷ்ய விண்கலங்கள் மட்டுமே இதுவரை சென்று வந்தன. தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஐரோப்பிய விண்வெளி மையம் `ஜூல்ஸ் வெர்னே' என்ற ஆளில்லா சரக்கு விண்கலத்தை தயாரித்து சோதனை முயற்சியாக விண்ணுக்கு அனுப்பியது. இதில் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர், உடைகள் மற்றும் விண்வெளி மையத்துக்கு தேவையான 5 தொன் பொருட்கள் அனுப்பப்பட்டன.

இதை எடுத்துக்கொண்டு சென்ற ஜூல்ஸ் வெர்னே, சர்வதேச விண்வெளி மையத்துடன் நேற்று வெற்றிகரமாக இணைந்தது. ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்துடன் இணையும் தொழில்நுட்பம் (டாக்கிங் சிஸ்டம்) ஜூல்ஸ் வெர்னேவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு தானாக செயல்படும் ஜி.பி.எஸ். நேவிகேஷன் சிஸ்டம், லேசர் சென்சார் போன்ற தொழில்நுட்பங்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

"புதிதாக வடிவமைக்கப்பட்டு சோதனை முயற்சியாக அனுப்பப்பட்ட இந்த ஆளில்லா விண்கலத்தின் எல்லா அம்சங்களுமே நாங்கள் எதிர்பார்த்ததைவிட வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது" என ஐரோப்பிய விண்வெளி மையத்தின் தலைவர் பாப் செஷன் கூறியுள்ளார்.

`ஜூல்ஸ் வெர்னே விண்கலத்தில் பயன்படுத்தப்பட்ட எல்லா அம்சங்களுமே மிகவும் பாதுகாப்பானது, நம்பகத்தன்மை வாய்ந்தது என நிரூபித்துள்ளோம். இதற்காக இத்திட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் மிக கடுமையாக உழைத்துள்ளோமென தானியங்கி விண்கலத்தின் திட்ட இயக்குநர் ஜோன் எல்வுட் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்கா மீது அணுவாயுத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அல்-ஹைடா திட்டம்
ஈராக்குக்கு செல்லும் பிரிட்டிஷ் படையினருக்கு` மகாபாரத பாடம்'
ஒபாமாவின் சவாலுக்கு பதிலாக வருமானவரி கணக்கை வெளியிட்டது கிளின்டன்- ஹிலாரி தம்பதி
தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தியத் தமிழர்களால் மலேசியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
கனடாவில் எய்ட்ஸ் பரப்பிய இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறை
நேபாளத்தின் தேர்தலை முன்னிட்டு மதுபான விற்பனைக்குத் தடை
எதிர்க்கட்சி அலுவலகங்கள் மீது சிம்பாப்வே பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கை
சர்வதேச விண்வெளி மையத்துடன் ஆளில்லா விண்கலம் `ஜூல்ஸ் வெர்னே' வெற்றிகரமாக இணைந்தது
கனடாவின் வரலாற்று புகழ்மிக்க கட்டடம் தீ விபத்தில் நாசம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com