நேபாளத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அங்கு மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு அமைதியான முறையில் தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக உள்நாட்டமைச்சின் அதிகாரிகள் தெரிவிக்கையில்;
"நேபாள தேர்தல் ஆணையம், ஹோட்டல்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வரும் 7 முதல் 13 ஆம் திகதி வரை மது விற்பனை செய்யத் தடை விதித்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக பொலிஸார் 24 மணிநேரமும் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.
தலைநகர் காத்மண்டு உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஹெலிகொப்டர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும். காத்மண்டுவில் 2,500 பாதுகாப்புப் படைவீரர்கள் பாதுகாப்புப் பணி மேற்கொள்வார்கள்.
பாதுகாப்பு படையினருக்கான காப்பீட்டு தொகையும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது" என்றனர்.
நேபாளத்தில் வரும் 10 ஆம் திகதி தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இந்திய நேபாள எல்லையை சீல் வைக்கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.