கனடாவில் எய்ட்ஸ் நோயை பரப்பிய இளைஞருக்கு பதினெட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவைச் சேர்ந்த இளைஞர் கார்ல் லியோனி கடந்த 1997 ஆம் ஆண்டு மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டபோது எய்ட்ஸ் நோய் இருப்பது தெரியவந்தது.
இருந்த போதிலும் தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதை மறைத்து 15க்கும் மேற்பட்டவர்களுடன் அவர் பாலியல் உறவு கொண்டு எய்ட்ஸ் நோயை அவர்களுக்கும் பரவச் செய்தார்.
அவரது இந்த குரூரச் செயல் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளி உலகிற்கு தெரியவந்தது. இதனையடுத்து பொலிஸார் அவரை கைது செய்து வழக்குத் தொடுத்தனர்.
சுமார் 4 ஆண்டு நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பின் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவருக்க 49 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
எனினும், சிறையில் அவரது நன்னடத்தை மற்றும் வயதைக் கருத்தில்கொண்டு தண்டனை 18 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
லியோனி தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொண்டதாகவும் மேல் முறையீடு செய்யப்போவது இல்லை என்றும் அவரது வழக்கறிஞர் கூறினார்.