Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, April 07, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
ஈராக்குக்கு செல்லும் பிரிட்டிஷ் படையினருக்கு` மகாபாரத பாடம்'
[07 - April - 2008] [Font Size - A - A - A]
ஈராக் அல்லது ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் பிரிட்டிஷ் இராணுவத்தினருக்கு இந்துக்களின் இதிகாசமான மகாபாரதத்திலிருந்து சிறந்த விடயங்களை எடுத்து விளக்கி உளவள ஆலோசனை வழங்கி வருகிறார் அந்த இராணுவத்தின் முதலாவது இந்து மதகுருவான கிரிஷான் ஆத்ரி. பிரிட்டிஷ் இராணுவத்தால் இந்தப் பணிக்காக 2005 இல் ஆத்ரி நியமிக்கப்பட்டார்.

சீக்கிய மதகுருவாக மன்டீப் கௌரும் பௌத்த மத போதனைக்காக சுனில்காரியக் கரவணம் இஸ்லாம் மதபோதனைக்காக அசிம் ஹா பிஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தைச் சென்ற ஆத்ரி பகவத்கீதையிலிருந்து சுலோகங்களை மேற்கோள்காட்டி போருக்கு ஏன் செல்ல வேண்டும் என்பது தொடர்பாக விளக்கமளித்து வருகிறார்.

பிரிட்டனின் ஆயுதப் படைகளில் 183,000 பேர் கிறிஸ்தவர்களாகும். இவர்களுக்கு கிறிஸ்தவ மத போதனைக்காக 300 பேர் உபதேசியர்களாக உள்ளனர்.

470 இந்துக்களும் பிரிட்டிஷ் படையில் உள்ளனர். இவர்களுக்கே ஆத்ரி போதித்து வருகிறார்.

உங்கள் நாட்டைப் பாதுகாக்கவும் உலகில் சமாதானத்தைப் பேணவும் கடவுள் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறார் என்று படைவீரர்களுக்குத் தான் கூறுவதாக ஆத்ரி தெரிவித்துள்ளார்.

அவர்கள் (படைவீரர்கள்) எவரையும் கொல்லவில்லை என்றும் கடமையையே செய்வதாகவும் நான் அவர்களுக்கு தெரிவித்து வருகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

கடமையே எனது முன்னுரிமை. இது எமது கர்மம். அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்று கிரிஷான் ஆத்ரி கூறுகிறார்.

Email this page Your Opinion Print this page
அமெரிக்கா மீது அணுவாயுத தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அல்-ஹைடா திட்டம்
ஈராக்குக்கு செல்லும் பிரிட்டிஷ் படையினருக்கு` மகாபாரத பாடம்'
ஒபாமாவின் சவாலுக்கு பதிலாக வருமானவரி கணக்கை வெளியிட்டது கிளின்டன்- ஹிலாரி தம்பதி
தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்தியத் தமிழர்களால் மலேசியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
கனடாவில் எய்ட்ஸ் பரப்பிய இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறை
நேபாளத்தின் தேர்தலை முன்னிட்டு மதுபான விற்பனைக்குத் தடை
எதிர்க்கட்சி அலுவலகங்கள் மீது சிம்பாப்வே பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கை
சர்வதேச விண்வெளி மையத்துடன் ஆளில்லா விண்கலம் `ஜூல்ஸ் வெர்னே' வெற்றிகரமாக இணைந்தது
கனடாவின் வரலாற்று புகழ்மிக்க கட்டடம் தீ விபத்தில் நாசம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com